ஏ கிரேட் நடிகைகள் என பிரிக்கப்பட்ட 6 ஹீரோயின்.. நம்பர் ஒன் நடிகையை தூக்கி கடாசிய த்ரிஷா

A Grade Heroines: திரை உலகில் நடிகர்கள் நடிப்பதை வைத்து அவர்களை கிரேட் வரிசையில் பிரிப்பார்கள். ஏ பி சி டி என நிறைய பிரிவுகள் உண்டு, அதில் எப்போதுமே அதிக டிமாண்டில் இருப்பவர்கள் ஏ கிரேட் வரிசையில் இடம் பிடிப்பார்கள். அப்படி தங்களது கலக்கலான நடிப்பினால் ஏ கிரேட் தரவரிசையில் இடம் பிடித்த ஆறு ஹீரோயின்கள் யார் என்பதை பார்ப்போம்.

தமன்னா: தமன்னா 2017 வரை பி கிரேடு ஹீரோயின் ஆகவே இருந்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியை சந்தித்ததே ஆகும். பிறகு இவர் நடித்து வெளியாகும் படங்கள் அனைத்துமே பிளாப்பிலே முடிந்தது. அதனால் வெப்சீரிஸ் பக்கம் போனார், அதுவும் கை குடுக்கவில்லை. ஜெயிலர் திரைப்படத்தில் ஒரே பாடலின் மூலம் ஏ கிரேட் வரிசையில் மீண்டும் இடம் பிடித்து விட்டார். தற்போது கிட்டத்தட்ட 4-5 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார்.

Also Read:யூடியூப் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்ற 5 நபர்கள்.. ஐட்டம் நடிகையுடன் குத்தாட்டம் போடும் ஜிபி முத்து

நயன்தாரா: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் லீடிங் நடிகைகளில் ஒருவராக டாப்பில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக நீண்ட ஆண்டுகாலம் இருக்கிறார். தனது உறுதியான கதாபாத்திரங்கள் மூலமும், திரைப்படங்களின் வெற்றி சதவீதம் வைத்தும் இது சாத்தியமானது. சுமார் 5 முதல் 11 கோடி வரை ஒரு படத்திற்கு இவருக்கு சம்பளம் கிடைக்கும்.

திரிஷா: 2000களின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை சார்மிங் ஹீரோயின் பட்டியலில் இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் படங்கள் அனைத்தும் ஹிட்டாடித்து கமர்சியல் ரீதியாகவும் சக்சஸும் ஆகிவிடும். இதனாலையே இவர் ஏ கிரேட் வரிசையில் எப்போதுமே இருப்பார். நயன்தாராவை மிஞ்சும் வகையில் தற்போது கமல், மணிரத்தினம் கூட்டணியில் உருவாக்க உள்ள kh234 திரைப்படத்தில், திரிஷா சுமார் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:பிக் பாஸ் வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. மூர்த்தியின் தம்பியை தூக்கிய விஜய் டிவி

சாய் பல்லவி: மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தன்னுடைய சாந்தமான தன்னடக்கம் உடைய நடிப்பிலேயே ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடித்து வெளிவரும் திரைப்படங்களில் இவரை பார்த்து ரசிப்பதற்கே ஒரு கூட்டமே இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதினாலேயே ஏ கிரேட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். 2 கோடி வரை இவர் தற்போது சம்பளம் வாங்குகிறார், இந்த லிஸ்டிலேயே குறைந்த சம்பளம் வாங்குவது இவர்தான்.

காஜல் அகர்வால்: திருமணம் ஆனதும் பொதுவாக நடிகைகளுக்கு டிமாண்ட் குறைந்து விடும். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் மார்க்கெட் குறையாமல் முன்னிலை நடிகையாகவே வலம் வருபவர் காஜல் அகர்வால். அதிக சதவீத வெற்றியினை கொடுத்து, கிட்டத்தட்ட 6 கோடி வரை ஒரு படத்திற்கு வசூலிக்கிறார்.

Also Read:நிச்சயத்திற்கு பின் காதலரின் மீது சந்தேகப்பட்டு கழட்டி விட்ட நடிகை.. அடுத்த இனிஷியலுக்காக மாட்டிய ஹீரோ

சமந்தா: தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கலக்கி கொண்டிருப்பவர் சமந்தா. எவ்வளவுதான் சர்ச்சைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து தன்னுடைய விடமுயற்சியை கைவிடாமல் இருக்கிறார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத போதிலும் சோர்ந்து போகாமல் மீண்டும், குஷி படத்தில் வேற லெவல் வெற்றியை கொடுத்து ஏ கிரேட் வரிசையில் தக்க வைத்துள்ளார். 4.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.