யூடியூப் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்ற 5 நபர்கள்.. ஐட்டம் நடிகையுடன் குத்தாட்டம் போடும் ஜிபி முத்து

Youtube Famous Persons: சோசியல் மீடியாக்களில் ஏதாவது கண்டன்ட் வீடியோக்களை பதிவிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்து, அப்படியே சிலர் படிப்படியாக பிரபலமடைவார்கள். ஜாக்பாட் அடித்தது போல் சாதாரண ஆளாக இருந்து, பிரபலமானதும் செலிபிரிட்டியாக மாறிய நபர்களும் உண்டு. அப்படி யூடியூப் மூலம் சினிமாவிற்கு சென்று, படங்கள் நடிக்கும் ஐந்து நபர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜி பி முத்து: டிக் டாக்கில் வீடியோக்கள் செய்து கொண்டிருந்தவர் ஜி பி முத்து. பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் வீடியோக்கள் செய்து போடுவதே வேலையாக வைத்திருந்தார். அவர் அதிகம் தகாத வார்த்தைகள் பேசியே பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதிலிருந்து பிக் பாஸ் சீசன் 6ல் வாய்ப்பு கிடைத்து. ஒ மை கடவுளே திரைப்படத்தில் சன்னி லியோன் உடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.விஜய் டிவியின் குக் வித் கோமாளிலும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து சம்பாதித்து ஜெகஜோதியாக இருக்கிறார்.

Also Read:கெட்ட வார்த்தையால் சென்சார் போர்டை அலறவிட்ட விக்ரம்.. 19 இடத்தில் வெட்டி விட்ட வார்த்தைகள்

ஆர் ஜே விக்னேஷ்: ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி, ஸ்மைல் சேட்டை மற்றும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலம் திரையுலகுக்கு வந்தவர் ஆர் ஜே விக்னேஷ். 2016 இல் வெளியான சென்னை 600028 பாகம் இரண்டு திரைப்படத்தில் கிரிக்கெட் கமாண்டராக அறிமுகமானார். பிறகு ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு திரைப்படத்தில் அவருடைய நண்பன் ஜீவாவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். நிறைய திரைப்படங்களில் வாய்ப்பும் கிடைத்தது.

சாகா: டெம்பிள் மங்கீஸ் சேனல் மூலம் பிரபலமானவர் சாகா. 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தில் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தார். ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் 2017 இல் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தில் பாலாஜியாக நடித்திருப்பார். இருட்டு அறையில் முரட்டு குத்து, நட்பே துணை, போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தில் டாக்டர்ராக நடித்திருந்தார்.

Also Read:தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

கோபி சுதாகர்: பரிதாபங்கள் சேனல் மூலம் யூடியூபில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பயங்கர பேமஸ் ஆக இருப்பவர்கள் கோபி சுதாகர். இவர்களின் வீடியோக்களே மீம்ஸ் ட்ரோல்ஸ் ஆக காட்டு தீ போல் சோசியல் மீடியாக்களில் பரவுகிறது. தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் இவர்களே ஒரு ட்ரெண்ட் செட்டராக முன்னணியில் இருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மீசைய முறுக்கு, ஸ்வாமி போன்ற திரைப்படங்களிலும் இருவரும் நடித்துள்ளனர்.

பிஜிலி ரமேஷ்: ஏதோ ஒரு யூடியூப் வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பாராட்டி பேசி அதிக அளவு மக்களின் கவனத்தை ஈர்த்து, ஃபேமஸானவர் பிஜிலி ரமேஷ். அதன் பிறகு சினிமாவில் 2019ல் வெளியான ஆடை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான எல்கேஜி படத்திலும்நடித்தார். நட்பே துணை, ஸ்வாமிபோன்ற திரைப்படங்களிலும் நடித்து திரைத்துறையில் பிரபலமாகிவிட்டார்.

Also Read:கல்யாணத்துக்கு பின்னும் மார்க்கெட்டை இழக்காத 5 நடிகைகள்.. கேரியருக்காக காதல் கணவரையே தூக்கி எறிந்த நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்