திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மதுவிற்காக அடிமையாகி 50 வயதுக்குள் உயிரை விட்ட 6 பெரிய நடிகர்கள்.. ஒரு பாட்டில் சரக்குக்காக கடைசி நேரத்தில் போராடிய சந்திரபாபு

Actors Addicted Alcohol: சினிமாவில் நடிப்பதற்கு படாத பாடுபட்டு நுழைந்த பிறகு தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று விடுகிறார்கள். அதன் மூலம் பேரும் புகழையும் சம்பாதித்து ஆடம்பரமான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுகிறார்கள். அப்படி சில நடிகர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு போன பின் குடியும் கும்மாளமாய் மாறி வாழ்க்கையை தொலைத்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சுருளிராஜன்: இவருடைய சினிமா பயணம் 60-ல் ஆரம்பித்த நிலையில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் மற்றும் பல நடிகர்களுடன் காமெடியில் கலக்கியவர் சுருளிராஜன். இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருடைய காமெடிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இவரிடம் மிகப்பெரிய கெட்ட பழக்கம் மதுவிற்கு அடிமையானது தான். எந்நேரமும் குடியும் கும்மாளமும் தான் இருப்பார். எந்த அளவுக்கு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாரோ அதே அளவுக்கு குடிப்பதிலும் பிஸியாகவே இருந்திருக்கிறார். அதனாலயே இவருடைய 42 வது வயதிலேயே உயிர் பிரிந்து விட்டது.

தேங்காய் சீனிவாசன்: 1960 களில் இருந்து 1980 கள் வரை கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் நடித்து இவருக்கென்று மிகப்பெரிய இடத்தை சினிமாவில் நிலைநாட்டி விட்டார். இவருடைய நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும், இவருடைய பேச்சு நக்கல் கலந்த காமெடி இருந்ததால் மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார். அப்படிப்பட்ட இவர் குடிக்கு அடிமையானதால் தினமும் கணக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு குடித்துவிட்டு இவருடைய 50-வது வயதில் இறந்திருக்கிறார்.

Also read: எம்ஜிஆரை உயிர் மூச்சாய் நினைத்த 5 நடிகர்கள்.. செல்ல பிள்ளையாய் வலம் வந்த பாக்கியராஜ்

பாலையா: என் எஸ் கிருஷ்ணன் மற்றும் எம்ஜிஆர் காலகட்டங்களில் அவர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகர்.அப்போதைய படங்களில் இவருடைய நடிப்பு இல்லாத படமே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய பேச்சாலும் நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்த பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு போனதால் உடல் பருமன் அதிகரித்து பட வாய்ப்பு இல்லாமல் பரிதாபமாக 58 வது வயதில் இறந்து விட்டார்.

அசோகன்: இவருடைய வித்தியாசமான நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், கனத்த குரலாலும் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இவருடைய நடிப்பு என்றாலே ரசிக்கும் படியாக தான் இருக்கும் என்று மக்களிடத்தில் பெயர் வாங்கியவர். இவர் நடிகர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்தார். பிறகு இவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்தால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி 51-வது வயதில் தன்னையே அழித்துக் கொண்டார்.

Also read: சிவாஜி, சரோஜா தேவியும் கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே படம்.. அதிகபட்சமாக வாங்கி கொடுத்த ரஜினி

பாண்டியன்:  ஒரு கடையில் வலையில் விற்றுக் கொண்டிருந்த இவரை பாரதிராஜா கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பு தான் மண்வாசனை. இப்படத்தில் நடித்ததன் மூலம் இவருடைய புகழ் எங்கேயோ போய்விட்டது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பிறகு பணம் காசு வந்ததால் கண்முன் தெரியாமல் குடிக்க ஆரம்பித்து விட்டார். இவருடைய நிலைமைக்கு ஏற்ற மாதிரி கிழக்கு சீமையிலே ஒரு பாடலுக்கு குடியும் கும்மாளமாய் ஆட்டம் போட்டு இருப்பார். இதுதான் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் செய்து வந்தார். பிறகு இதாலேயே அழிந்து 49 வது வயதில் இறந்து விட்டார்..

சந்திரபாபு: சிவாஜி, எம்ஜிஆர் காலங்களில் நகைச்சுவை மன்னராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடி கட்டி பிறந்தவர்தான் சந்திரபாபு. மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இவருக்கு அதிகமான அளவில் பேரும் புகழும் கிடைத்தது. திருமணத்திற்குப் பின் இவருடைய கல்யாண வாழ்க்கை சரி இல்லாததால் எந்நேரமும் குடிக்க ஆரம்பித்து விட்டார். அதனாலயே சொத்து வசதி எல்லாத்தையும் இழந்து கடைசி காலத்தில் பணமே இல்லாமல் ஒரு பாட்டில் சரக்குக்காக போராடி உயிரை 46 வது வயதில் விட்டிருக்கிறார்.

இவர்கள் அனைவரும் பெரிய நடிகர்களாக இருக்கும் பொழுது குடித்து 50 வயதுக்குள் இறந்தவர்கள். இதில் ஜெய்சங்கரும், நாகேஷும் குடியினால் இறந்தவர்கள் தான். ஆனால் வயதான நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.

Also read: எம்ஜிஆர், சிவாஜியால் கிடைத்த புகழ்.. லட்சியத்திற்காக உதறி தள்ளிய நடிகை

- Advertisement -

Trending News