பசுபதி நடிப்பில் மிரட்டிய 6 படங்கள்.. கமலையே நடிப்பில் ஓவர்டேக் செய்த படம்

சினிமாவில் இயல்பான பன்முக நடிப்பு திறமை உடைய நடிகராக விளங்கும் நடிகர் பசுபதி, தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். அப்படி இவர் உலகநாயகன் கமலுடன் சேர்ந்து நடித்த படத்தில் இவருடைய நடிப்பால் கமலையே ஓவர்டேக் செய்திருக்கிறார்.

வெயில்:  2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பாவனா, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் பசுபதி, முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார். 20 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிய முருகேசன், காதல் தோல்வியால் மீண்டும் தந்தை, தம்பி கதிர் ஆகியோரை பார்க்க வீட்டிற்கு வருகிறான்.

வியாபாரப் போட்டியில் கதிரை கத்தியால் குத்திய அண்ணாச்சியை பழிவாங்க எதிரிகள் இடத்திற்கே முருகேசன் செல்கிறார். அங்கு முருகேசன் அண்ணாச்சி உடைய அடி ஆட்களால் அடித்து கொலைசெய்யப்பட்டு, தன்னுடைய தம்பிக்காக உயிரையே கொடுக்கிறான். அதன் பிறகு முருகேசனை நினைத்து அவருடைய தந்தை வருத்தம் அடைகிறார். இதில் படத்தின் கதாநாயகனாக கதிர் கதாபாத்திரத்தை விட முருகேசன் கதாபாத்திரம் தான் வலுவாக பேசப்பட்டிருக்கும். இதில் பசுபதி அற்புதமாக நடித்திருப்பார்.

விருமாண்டி: 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த விருமாண்டி திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் கமல்ஹாசனுடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதில் கமலஹாசன் விருமாண்டி என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு நிகராக படத்தில் நடித்து அசத்திய பசுபதி, கொத்தாள தேவர் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பால் மிரள விட்டிருப்பார்.

இதில் விருமாண்டியும் கொத்தாள தேவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். மரண தண்டனை கைதிகளாக இருக்கு இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பகைமை, கொலை வெறி, பழிக்குப் பழி வாங்குதல் போன்றவையெல்லாம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற படத்தில் காட்டி ரசிகர்களை உறைய வைத்திருப்பார்கள். மேலும் இதில் பசுபதியின் நடிப்பு கமலையே ஓவர்டேக் செய்திருக்கும்.

குசேலன்: 2008 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினிகாந்த் அசோக் குமார் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகராக இந்த படத்தில் வலம் வருவார். இதில் அசோக் குமார் சிறுவயதில் நண்பராக பசுபதி, பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தான் அசோக்குடைய நெருங்கிய நண்பன் என வெளியில் சொன்னாலும் யாரும் நம்பவில்லை என சாதாரண சலூன் கடை வைத்திருக்கும் பாலு மனம் வருந்துகிறார். ஒருகட்டத்தில் அசோக், பாலு இருக்கும் அதே ஊரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்போது பானுவை பற்றி தெரிவிக்கிறார். தன்னுடைய நெருங்கிய நண்பர் பாலு தான் தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்  என அசோக் சொன்னதும் நெகிழ்ந்து போல பாலு யாரிடமும் சொல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே கிளம்பி வீட்டிற்கு செல்கிறான்.

அதன் பிறகு ஊர்மக்கள் பானுவை பற்றி அசோக்கிடம் சொல்லவும், அசோக் பாலுவை பார்க்க வீட்டிற்கு வருகிறாள். அசோக்-பாலு இருவரும் சிறு வயதுக்குப் பிறகு சந்திக்கும் அந்த நெகிழ்ச்சியான தருணம், படத்தைப் பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும். இதில் பாலுவாக பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட இருப்பார்.

சார் பேட்டா பரம்பரை: பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யா, ஜான் விஜய், கலையரசன் இவர்களுடன் பசுபதி தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இதில் கதாநாயகன் கபிலன் உடைய குத்துச் சண்டை பயிற்சியாளராக ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார்.

இதில் ஏற்கெனவே தந்தையை இழந்த கபிலனுக்கு தந்தையாக இருக்கும் பொறுப்பிலிருந்த ரங்கன், ஒரு கட்டத்தில் குத்துச் சண்டையில் கபிலனுக்கு ஆர்வம் ஏற்பட அவளுக்கு ஆசானாக மாறுவார். தன்னுடைய மகனை விட கபிலன் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கும் ரங்கன் உடைய கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும். போதையில் வழிமாறி போன கபிலனை மீண்டும் குத்துச்சண்டை வீரனாக்கும் பொறுப்பை கையில் எடுக்கும் ரங்கன் அதில் சாமர்த்தியமாக வெற்றியும் பெறுவார்.

அரவான்: 2012 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆதி, பசுபதி, தன்சிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதில் கதாநாயகன் ஆதிக்கு நிகராகவே பசுபதியின் கதாபாத்திரமும் வலுவாக பேசப்பட்டிருக்கும். இதில் களவு செய்யும் தொழிலில் ஈடுபடும் ஆதி மற்றும் பசுபதி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.

ஈ: 2006 ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் ஜீவா, நயன்தாரா, பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் ஏழைகளுக்காக இலவச மருத்துவம் செய்வதாகக் கூறி, அவர்களை கொலை செய்து அவர்களது உறுப்புகளை திருடி பணம் சம்பாதிக்கும் கும்பலை காட்டிக் கொடுப்பதற்காக பசுபதி இந்த படத்தில் படாத பாடு படுவார். இதில் கதாநாயகன் ஜீவாவிற்கு சமமாக பசுபதி தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்ட இருப்பார். ஒரு கட்டத்தில் பசுபதி தன்னுடைய உயிரையே துறந்து கதாநாயகனை வைத்தே அந்த கும்பலுக்கு முடிவு கட்டுவார்.

இவ்வாறு பசுபதி நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்து கதாநாயகர்களுக்கு போட்டியாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக விருமாண்டி படத்தில் இவருடைய நடிப்பு இன்றும் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரமாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்