பொறுத்தது போதும் என அடக்குமுறைக்கு தீர்வு கண்ட 6 படங்கள்.. அசுரனாய் தெறிக்க விட்ட சிவசாமி

6 Movies: சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்த படங்கள் தமிழ் சினிமாவில் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அடக்குமுறை ஆளுமைக்கு எதிராய் நின்ற கதாபாத்திரங்கள் இடம்பெற்ற 6 படங்களை இங்கு காண்போம்.

உன்னால் முடியும் தம்பி: தெலுங்கு படத்தின் ரீமேக் காண இப்படத்தில் கமல், ஜெமினி கணேசன், மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரின் பாகுபாட்டால், சமூக நலன் கருதி கமல் மேற்கொள்ளும் முயற்சற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

Also Read: இந்த 3 படங்களின் மொத்த கலவைதான் ஜெயிலர்.. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

இந்திரா: 1995ல் சுபாஷினி மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இந்திரா. இப்படத்தில் அரவிந்த்சாமி, அனுஹாசன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இரு கிராமத்தினர் இடையே ஏற்படும் சாதி கலவரத்தை முறியடிக்க இளம் தலைமுறையினராய் முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மற்றும் அனுஹாசன் நடித்திருப்பார்கள்.

இரணியன்: வின்சென்ட் செல்வா இயக்கத்தில் முரளி, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் சுதந்திர போராட்ட தியாகி ஆன வாட்டாகுடி இரணியனின் கற்பனையில் உருவான கதை ஆகும். கிராமத்தினரை கொத்தடிமையாய் துன்புறுத்தும் கதாபாத்திரத்தில் ஆண்டே ரகுவரன் நடித்திருப்பார். அவரை முரளி, இரணியன் கதாபாத்திரத்தில் கிழித்து தொங்க விட்டிருப்பார்.

Also Read: குடும்பம் குட்டின்னு ஆயிடுச்சு நீ நடிச்சு கிழிச்சது போதும்.. கமல் படத்தோடு கேரியரை முடித்து கொள்ளும் நடிகை

பரியேறும் பெருமாள்: 2018ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேல் சாதியினரால் ஒதுக்கப்படும் கீழ் சாதியினரின் நிலைமையை எடுத்துரைக்கும் படமாய் இப்படம் விமர்சனத்திற்கு ஆளானது.

மாமன்னன்: சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேல் சாதியினரால் பிரச்சனையை சந்திக்கும் கீழ் சாதியினரின் துணிச்சலான போராட்டத்தை வெளிக்காட்டும் விதமாய் இக்கதை மக்களிடையே விமர்சனத்திற்கு ஆளாகியது. இருப்பினும் பட்ஜெட் ரீதியாய் நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

Also Read: ஜெயிலர் ட்ரைலரில் காண்பிக்காத 3 டாப் ஹீரோக்கள்.. பக்காவாக காய் நகர்த்திய நெல்சன் கூறும் காரணம்

அசுரன்: 2019ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் அசுரன். வடக்கூர், தெக்கூர் இடையே சாதி பிரச்சனையை பெரிதாக்கி தன் மகனை இழந்து நிற்கும் சிவசாமியின் அசுரன் அவதாரம் கதைக்கு திருப்புமுனையாய் அமைந்தது. மேலும் இறுதியில் இவர் வெளிப்படுத்திய தகவல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்