டிரெய்லரிலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்கள்.. ரிலீசில் மண்ணை கவ்விய அஜித்

ஒரு திரைப்படம் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்பதை டிரெய்லரை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். ஆனால் டிரெய்லரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ரிலீசில் படுதோல்வி அடைந்த படங்களும் இருக்கிறது. அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு தோல்வி அடைந்த ஆறு திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

காஷ்மோரா கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவான இந்தப் படத்தின் டிரெய்லரே படு மிரட்டலாக இருந்தது. இதனால் இப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரும் வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இப்படம் தோல்வி அடைந்தது.

Also read:விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது. அந்த வகையில் சிம்புவிற்கு இந்த திரைப்படம் படுமோசமான விமர்சனத்தையும் கொடுத்தது.

அஞ்சான் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. மேலும் இப்படம் வெளிவருவதற்கு முன்பு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது படகுழுவை அதிர்ச்சி அடைய வைத்தது.

லிங்கா கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் வழக்கமான திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்படத்திற்கு அதிகமாக இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது.

Also read:அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

புலி சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. வரலாற்று திரைப்படமாக உருவான இந்த திரைப்படத்தில் விஜய்யின் மாறுபட்ட நடிப்பை காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் போல் இருக்கிறது போன்ற விமர்சனங்களால் படுதோல்வி அடைந்தது.

விவேகம் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் அஜித்துக்கு தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இப்படம் டிரெய்லரிலேயே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read:மெல்ல மெல்ல ரஜினி இடத்தை பிடிக்கும் தளபதி.. ஜப்பான், அமெரிக்கா மார்க்கெட்டை பிடிக்கும் விஜய்