மெல்ல மெல்ல ரஜினி இடத்தை பிடிக்கும் தளபதி.. ஜப்பான், அமெரிக்கா மார்க்கெட்டை பிடிக்கும் விஜய்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பேரும், புகழுடன் இருக்கும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் தமிழ் ரசிகர்களைப் போலவே வெளிநாட்டு ரசிகர்களும் அவர் மீது தீராத அன்பு கொண்டுள்ளனர். இதனாலேயே சூப்பர் ஸ்டார் தற்போது புகழின் உச்சியில் இருந்து வருகிறார்.

தற்போது அவருடைய இடத்தை நடிகர் விஜய் மெல்ல மெல்ல பிடித்து வருகிறார். திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாஸ் காட்டி வரும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் படம் வெளியானாலே அதை அவர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள். அந்த வரிசையில் தற்போது தமிழ் திரைப்படங்கள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also read : விஜய் உடன் நடிக்க மறுத்த பிரித்விராஜ்.. சூப்பர் ஹீரோவை தட்டி தூக்கிய லோகேஷ்

அதிலும் ரஜினி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தான் ரஜினிக்கு வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக ஆரம்பித்தது. தற்போது அதேபோன்ற ஒரு சூழல்தான் விஜய்க்கும் ஏற்பட்டுள்ளது.

அதாவது இதுவரை ரஜினியின் திரைப்படங்களுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு இருந்தது. அதன் அடிப்படையில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் அமெரிக்க தியேட்டர்களால் 8.75 கோடி கொடுத்து வாங்கப்பட்டது. அதை அடுத்து கபாலி திரைப்படம் 8.5 கோடிக்கும், தர்பார் 8 கோடிக்கும் விற்பனையானது. அதேபோன்று தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் 7.5 கோடிக்கு பிசினஸ் ஆகி இருக்கிறது.

Also read : பழைய எனர்ஜியுடன் களம் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. 32 வருடங்களுக்குப் பிறகு மாஸ் இயக்குனருடன் கூட்டணி

இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் தளபதி 67 படத்திற்கு கூட அங்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பல கோடி கொடுத்து கைப்பற்றவும் அவர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டு இருக்கின்றனர். மேலும் ரஜினியின் படங்களுக்கு இருந்த மாஸ் குறைந்து தற்போது விஜய்யின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜப்பான் போன்ற நாடுகளிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உருவாக தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் விரைவில் ஜப்பான் நாட்டில் வெளியாக இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ரஜினிக்கு அடுத்து ஜப்பான் நாட்டில் விஜய்க்கும் மவுசு ஏறியுள்ளது தெளிவாக தெரிகிறது.

Also read : மெத்தனத்தில் இருக்கும் விஜய் அண்ட் கோ.. லீக் விஷயத்தில் இருந்து கடும் அப்செட்டில் தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்