கமலுக்கு வில்லனாக சத்யராஜ் மிரட்டிய 6 படங்கள்.. இன்று வரை மனதில் நிற்கும் தகடு தகடு

வில்லாதி வில்லனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த சத்யராஜ் ஆரம்ப காலத்தில் உலகநாயகன் கமலுக்கு வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். அதிலும் காக்கிச்சட்டை படத்தில் இவர் சொன்ன ‘தகடு தகடு’ என்கின்ற டயலாக் படு பேமஸ் ஆனது.

சட்டம் என் கையில்: 1978 ஆம் ஆண்டு டிஎன் பாலு இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான இந்தப் படம் தான் சத்யராஜின் முதல் படம். இந்தப் படத்தில் உலக நாயகனுக்கு சத்யராஜ் வில்லனாக டிக்கி என்ற தோன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் வெகு சீக்கிரமே பதிந்து விட்டார். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு அடுத்தடுத்து வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

எனக்குள் ஒருவன்: 1984 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன், சோபனா என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கமலஹாசன் மதன், உபேந்திரா என்ற இரு வேடத்தில் நடித்திருப்பார். இதில் ராஜதுரை-யாக சத்தியராஜ் கமலுக்கு வில்லனாக நடித்து மிரட்டினார்.

காக்கிச்சட்டை: 1985 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமலஹாசன் அம்பிகா ஜோடி சேர்ந்திருப்பார்கள். இதில் விக்கி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் வில்லனாக மிரட்டி இருப்பார். அதிலும் இந்தப் படத்தில் சத்யராஜ் பேசும் எவர்கிரீன் வசனமாக ‘தகடு தகடு’ என்ற டயலாக், இன்றுவரை ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் பேமஸ் டயலாக்காக அமைந்தது.

மங்கம்மா சபதம்: 1985 ஆம் ஆண்டு கே விஜயன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமலஹாசன் இரண்டு கதாபாத்திரங்களான தந்தை மற்றும் மகனாக நடித்திருப்பார். இதில் சத்யராஜ் வயதான தோற்றத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து திரையரங்கையே மிரள வைத்திருப்பார்.

ஜப்பானின் கல்யாணராமன்: 1985 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன், ராதா ஜோடி சேர்ந்த இந்த படத்தில் உலக  நாயகனுக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். இந்த படத்தை 1979 ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் என்ற படத்தின் தொடர்ச்சியாக எடுத்திருப்பார்கள். இதில் ராமன் மற்றும் கல்யாணம் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். இவருக்கு வில்லனாக நரேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

விக்ரம்: 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு வில்லனாக சத்யராஜ் மிரட்டி இருப்பார். அப்பவே 1 கோடி பொருட்களில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் சத்யராஜின் வில்லத்தனம் தனித்துவமாக பேசப்பட்டது. அத்துடன் இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.

இவ்வாறு இந்த 6 படங்களிலும் சத்யராஜ் கமலுக்கு வில்லனாக நடித்து உச்சம் தொட்ட படங்களாகும். அதன் பிறகு சத்யராஜுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று ஹீரோவாகவும் கலக்கினார். அத்துடன் இப்போது வரை சினிமாவை விட்டு விலகாத சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் இன்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -