ரஜினி, விஜய்க்கு ஆட்டம் காட்டும் எலான் மஸ்க்.. ட்விட்டர் சம்பவத்தால் கதி கலங்கி போன 6 பிரபலங்கள்

அண்மை காலமாக ட்விட்டர் தளம் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது. என்றைக்கு அதன் பொறுப்பை எலான் மஸ்க் கையில் எடுத்தாரோ அன்றிலிருந்து பல அதிரடி நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அதன் லோகோவை நாயாக மாற்றி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தார். அது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

அந்த வகையில் தற்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் ஆட்டம் காட்டி இருக்கிறார் எலான் மஸ்க். அதாவது இப்போது ட்விட்டர் தளத்தில் இருக்கும் பிரபலங்களின் பெயருக்கு அருகில் இருக்கும் ப்ளூ டிக் அகற்றப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை இன்று நடத்தி காட்டி பலரையும் கதி கலங்க வைத்திருக்கிறது டிவிட்டர் தளம்.

Also read: 3வது முறை மோதியும் அஜித்துடன் தோற்றுப்போன விஜய்.. வம்சியால் தளபதிக்கு வந்த சோதனை

ஏனென்றால் இனிமேல் அந்த ப்ளூடூத் இருக்க வேண்டும் என்றால் மாதா மாதம் சந்தா கட்ட வேண்டுமாம். இல்லை என்றால் பாராபட்சமே பார்க்க மாட்டேன் என்று சொல்லும் வகையில் எலான் மஸ்க் பல பிரபலங்களின் பெயருக்கு அருகில் இருந்த ப்ளூ டிக்கையும் தூக்கி கெத்து காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினி, விஜய், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல பிரபலங்களின் ப்ளூ டிக்கும் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் டாப் பிரபலங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தான் தற்போது மீடியாக்களில் தீயாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விஜய்யின் அருவருப்பான அரசியல்.. மட்டமான வேலைகளை புட்டு புட்டு வைக்கும் பிரபலம்

இப்படி ஆயிரக்கணக்கான அக்கவுண்டுகளில் கை வைத்து சம்பவம் செய்திருக்கிறது ட்விட்டர் தளம். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சந்தா எல்லாம் கட்ட முடியாது என்று பின்வாங்கி இருக்கின்றனர். ஆனாலும் எலான் மஸ்க் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் என்று தன் கெத்தை குறைக்காமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் இது போன்ற ப்ளூ டிக் இருப்பது ஒரு பெருமையாக பார்க்கப்படுவதால் பிரபலங்கள் பலரும் தற்போது இந்த அதிரடியை பார்த்து பதறிப் போய் இருக்கின்றனர். இப்படியா ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்துவது என்ற ரீதியில் பலரும் இப்போது சந்தா கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்களாம். போகிற போக்கை பார்த்தால் அவர் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை. அந்த பீதியில் தான் பலரும் இருக்கின்றனர்.

Also read: ஜவானால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட படம்

Next Story

- Advertisement -