வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தளபதி கேரியரில் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயம்.. 6 பாலிவுட் நடிகைகளை அறிமுகப்படுத்திய விஜய்

Actor Vijay: தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை அத்தனையும் இணையத்தில் இன்றுவரை ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் இப்போதெல்லாம் இளம் இயக்குனர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகளை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஸ்வப்னா பேடி: விஜய் தமிழ் சினிமாவில் அறிமுக ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த போராடிய நேரத்தில் வெளியான திரைப்படம் தான் மாண்புமிகு மாணவன். இந்த படத்தில் நடிகை ஸ்வப்னா பேடி கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து, முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

Also Read:தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. 2 நிமிட வீடியோவில் மொத்தத்தையும் காட்டிய வெங்கட் பிரபு

டிம்பிள்: 1997 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் காலமெல்லாம் காத்திருப்பேன். இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை டிம்பிள் அறிமுகமாகி இருந்தார். தமிழ் சினிமாவில் இந்த ஒரு படத்தின் மூலமே ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார் இந்த நாயகி. இவரும் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்தார்.

பிரியங்கா சோப்ரா: கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் வெற்றி பெற்றவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த வெற்றிக்கு பிறகு இவர் முதலில் கோலிவுட்டில் தளபதி விஜய் உடன் இணைந்து தமிழன் திரைப்படத்தில் தான் நடித்தார். தற்போது பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார் இவர்.

Also Read:பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

மோனிகா கஸ்டலினோ: இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த மின்சார கண்ணா திரைப்படத்தில் அவருடன் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் மோனிகா கஸ்டலினோ. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பாலிவுட் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளும் வந்தன.

ஷாஹீன் கான்: மாடலிங் துறையில் இருந்து சினிமா நடிகையாக மாறியவர்தான் ஷாஹீன் கான். இவர் தென்னிந்திய சினிமாக்களில் சந்தியா என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார். தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த யூத் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.

அமீஷா பட்டேல்: கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புதிய கீதை. இந்த படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகை அமித்ஷா பட்டேல் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த ஒரு படம் தான் அவர் தமிழில் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் ஆகும்.

Also Read:அரசியலில் பதம் பார்க்க லியோவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. வாயடைத்து போய் நிற்கும் லோகேஷ்

- Advertisement -

Trending News