ஹீரோயின் தகுதியே கிடையாது என விரட்டப்பட்ட 6 நடிகைகள்.. எவ்வளவு காட்டியும் ஓப்பேராத ஷிவானி

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை முன்னணி இடத்தை பெற வேண்டும் என்றால் அழகும், திறமையும் நிச்சயம் இருக்க வேண்டும். அழகை மட்டுமே வைத்துக் கொண்டு சாதிக்க நினைக்கும் எத்தனையோ நடிகைகள் இப்போது மார்க்கெட்டை இழந்து போயிருக்கின்றனர்.

அதேபோன்று நடிப்பு திறமை இருந்தும் கூட சில நடிகைகளுக்கு பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது என்று ஒதுக்கப்பட்ட ஆறு நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

ஷிவானி சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு முன்பே சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவது, கவர்ச்சி டான்ஸ் ஆடுவது என்று ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

அந்த அடிப்படையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத ஷிவானி பொம்மை போன்று அந்த வீட்டில் இருந்தார். அதன் பிறகு விக்ரம், வீட்டில விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் தலையை காட்டினார். அப்படியும் இவருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் வரவில்லை. ஏனென்றால் வெறும் கவர்ச்சி பதுமையாக இருக்கும் இவருக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Also read:அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

மனிஷா யாதவ்: வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் சண்டி முனி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவரை ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் விரும்பாதது தான் இதற்கு காரணம்.

துஷாரா விஜயன்: பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இவர் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருப்பினும் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

மாளவிகா மோகனன்: மலையாள நடிகையாக இருக்கும் இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தனுசுடன் இவர் நடித்திருந்த மாறன் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

சோசியல் மீடியாவில் பல கிளாமர் போட்டோக்களை இறக்கியும் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவருக்கு நடிப்பு வரவில்லை என்பது மட்டுமல்லாமல் ஹீரோயினுக்கான குணாதிசயமும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

Also read:ஹீரோக்களை தாண்டி சத்தியராஜ் பெயர் வாங்கிய 5 படங்கள்.. நண்பன் பட வைரஸ் அல்டிமேட்

ரம்யா நம்பீசன்: குள்ளநரி கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு பாடகியாகவும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இவருடைய அழகான குரலுக்கு கிடைத்த வரவேற்பு இவருடைய நடிப்புக்கு கிடைக்கவில்லை.

மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தாலும் தமிழில் எப்போதாவது தான் இவரை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதில் பயங்கர திமிருடன் நடந்து கொண்ட இவரை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. அதன் பிறகு சில காலங்கள் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இவர் தற்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இவர் ஹீரோயினாக நடிக்க செட்டாக மாட்டார் என்பது தான் பலரின் கருத்து.

Also read:பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

Next Story

- Advertisement -