வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அதிர்ச்சி தரும்படி விலை மாதுவாக நடித்த 6 நடிகைகள்.. சினேகாவையே அந்தரங்க தொழிலாளியாக ஆக்கிய செல்வராகவன்

பொதுவாக படங்களில் படுக்கையறை மற்றும் முத்த காட்சிகள் இடம் பெறுவது இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. ஆனால் சில நடிகைகள் படத்தில் விலை மாதுவாகவும் நடித்துள்ளனர். துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகைகளுக்கு தைரியம் வேண்டும். அவ்வாறு நடித்த ஆறு நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

சரண்யா பொன்வண்ணன் : மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று தான் நாயகன். கமல், சரண்யா, ஜனகராஜ் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தில் நீலா என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

Also Read : சாமியார் வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்திய 6 நடிகர்கள்.. பரமசிவனாய் பட்டைய கிளப்பிய சூப்பர் ஸ்டார், கமல்

சங்கீதா : ஸ்ரீ சிவா இயக்கத்தில் சங்கீதா, பிரேம், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தனம். பெரும்பாலும் சங்கீதா கவர்ச்சி கதாபாத்திரங்களை தான் ஏற்று நடித்து வந்தார். தனம் படத்தில் அந்தரங்க தொழில் செய்யும் பெண்ணாக சங்கீதா நடித்திருந்தார். அதன்பின்பு பிரேமை திருமணம் செய்து கொள்வார்.

அனுஷ்கா : சிம்பு, பரத், பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் வானம். இந்த படத்தில் மூன்று வேறுபட்ட கதைகள் கடைசியில் ஒன்றாக இணைவது போல் படம் எடுக்கப்பட்டிருக்கும். மேலும் அனுஷ்கா இப்படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் தேசியாக நடித்திருந்தார்.

Also Read : இளசுகளின் 6 கிரஷ் நடிகைகளை ஆன்ட்டி என ஒதுக்கப்பட்ட பரிதாபம்.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா

ரம்யா கிருஷ்ணன் : எப்போதுமே மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா போன்றோர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தார். அதுவும் லீலா என்ற கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார்.

சதா : தென்னிந்திய நடிகைகளுக்கு உண்டான முகபாவனை உடையவர் சதா. ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சதா டார்ச் லைட் என்ற படத்தில் அந்தரங்க தொழிலாளியாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். மேலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

சினேகா : தனுஷின் சினிமா கேரியரின் வளர்ச்சிக்கு முக்கியமான படங்களில் ஒன்றுதான் புதுப்பேட்டை. இந்தப் படத்தில் சினேகா, சோனியா அகர்வால் போன்ற நடிகைகள் நடித்திருந்தனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தில் சினேகா அந்தரங்க தொழிலாளி கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலாக நடித்திருந்தார்.

Also Read : தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்காவின் 5 படங்கள்.. ராஜமாதாவை ஒரு கை பார்த்த தேவசேனா

- Advertisement -

Trending News