அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

சினிமாவில் ரஜினி எப்படி இவ்வளவு பெரிய அசைக்க முடியாத  ஹீரோவாக மாறி இருக்கிறார் என்பதற்கு முக்கிய காரணம் அவருடைய ஸ்டைல்தான். அதிலும் இவர் நடித்தும் ஒவ்வொரு படத்திலும் சிகரெட்டை விரல்களில் மாற்றி மாற்றி வித்தை காட்டுவதும், விதவிதமான ஸ்டைல்களில் சிகரெட் புகையை ஊதி தள்ளுவதும் இளசுகளை வெகுவாகக்  கவர்ந்து. ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் வகையில் 6 நடிகைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

ஷகிலா: கவர்ச்சி நடிகை ஷகிலா தமிழ் மற்றும் மலையாள படங்களில் கிளாமர் குயின் ஆக தோன்றி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு தான்  இருக்கிறது. அவர் அதை தனது பொழுதுபோக்காகவே செய்து கொண்டிருப்பதால், புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

சோனியா அகர்வால்: முன்னாள் மைத்துனனான தனுஷ் உடன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு மார்க்கெட் குறைந்ததும் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு பாக்கெட்டாவது அடித்து விடுவாராம்.

Also Read: ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நயன்தாரா, முன்பு செயின் ஸ்மோக்கர் ஆக இருந்திருக்கிறார். பார்ட்டியில் தண்ணி, தம்மு என ஓவர் அலப்பறை செய்து கொண்டிருந்த நயன், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்திலிருந்து மீண்டு விட்டார். கடந்த வருடம் நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ், சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளுடன் குடும்ப குத்து விளக்காகவே மாறிவிட்டார். 

அமலா பால்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அமலா பால், அதன் பிறகு மைனா படத்தில் கிராமத்து கதாநாயகியாக தோன்றி தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். இதன் பிறகு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட அமலா பால், இயக்குனர் ஏஎல் விஜய் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் அமலா பாலுக்கு குடிப்பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கமும் இருக்கும் விஷயம் ஏஎல் விஜய்க்கு தெரிய வந்தது. இவர் நம்முடைய குடும்பத்திற்கு செட்டாக மாட்டார் என்று விவாகரத்து கொடுத்துவிட்டார்.

தற்போது  அம்மணி பாட்டிலும் கையுமாய் சிகரெட்டை ஊதி தள்ளும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பதிவிட்டு ஷாக் கொடுக்கிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அமலாபால் வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும்  சிகரெட் புகையை ஊதி தள்ளுவதை பார்க்கும் போது விட்டா காது வழியாக கூட ஊதி விடுவார். அந்த அளவிற்கு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

Also Read: கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 நடிகைகள்.. கிளாமரில் லேடி சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா: பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது டாப் நடிகர்களின் படங்களின் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கண்ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அப்படிப்பட்டவர் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பு தளத்தில் சிகரெட் பிடித்து தனக்கு அலர்ஜி ஏற்பட்டதாகவும் தெரிவித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் அம்மணி அவ்வளவு பெரிய யோக்கியவாதி போல் வெற்றிமாறனை குறை சொன்னது ஆண்ட்ரியாவை பற்றி தெரிந்த பலருக்கும் வியப்பளித்தது.

அபிராமி: நோட்டா, காலா, நேர்கொண்ட பார்வை, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபிராமி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே அடிக்கடி ஸ்மோக்கிங் ரூமுக்கு சென்று கொண்டு வருவதை வைத்து இவர் எவ்வளவு பெரிய செயின் ஸ்மோக்கர் என்பது ரசிகர்களுக்கு புரிந்து விட்டது.

இதைப் பற்றி இவரிடம் பேட்டி ஒன்றில் கேட்டபோது, ஸ்கூல் படிக்கும்போதே புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன். அதிலும் பிக் பாஸ் வீட்டில் அவ்வளவு டென்ஷன் உண்டாகும். அதனால் அடிக்கடி புகை பிடித்து தன்னுடைய மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டதாகவும் வெளிப்படையாக தெரிவித்தார்.

Also Read: டாப் இயக்குனருடன் பல கோடி லாபத்தை பார்க்க கமல் தீட்டிய பிளான்.. வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன ரஜினி!

இவ்வாறு இந்த 6  நடிகைகளுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிஞ்சும் அளவுக்கு சிலர் சிகரெட் புகைகளை ஊதி தள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -