சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காசுக்காக கண்டமேனி பேசும் 5 யூடியூப் பிரபலங்கள்.. பலரின் அந்தரங்கங்களை அவிழ்த்து விடும் பயில்வான்

சினிமாவில் இருந்த பிரபலங்கள் சிலர் நடிக்கும் போது கூட அவ்வளவு பேமஸ் ஆகவில்லை. இப்போது  யூடியூபரான பிறகு நல்ல காசு பார்த்து வருகின்றனர். அதற்காக இஷ்டத்திற்கு வாய் கூசாமல் கண்ட மேனிக்க இவர்கள் பேசுவது தான் சகிக்கல. அதிலும் பயில்வான் ரங்கநாதன் பலரின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு வைக்கிறார். 

பயில்வான் ரங்கநாதன்: பயில்வானை பற்றி சொல்லவா வேண்டும். நடிகராக இருந்தபோது அரசல் புறசலாக காதுக்கு வந்த ஒரு சில விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டு மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் மென்று தின்று கொண்டிருக்கிறார். அதிலும் காது கூசும் அளவுக்கு நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி யூடியூப் சேனலில் வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோஸ் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது. 

நடிகை ரேகா நாயரை பற்றி ரொம்பவே கேவலமாக பேசினார். இதை கேட்டதும் கொந்தளித்த அவரும் பயில்வானை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சட்டையை பிடித்து நிற்க வைத்த கேள்வி கேட்டார் அதையும் சமாளித்த பயில்வான், தன்னுடைய ஆட்டத்தை அடக்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்து தான் மிகவும் மோசமான வீடியோக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல சில்க் முதல் சினேகா வரை இவர் எந்த நடிகையையும் விட்டு வைக்காமல் அவர்களுடைய அந்தரங்க விஷயத்தை அப்பட்டமாக பேசினார். இவர் பேசும் வீடியோஸ் டிரெண்டாகுவதான் மூலம் கிடைக்கும் பணம் தான், இவரை இவ்வளவு துணிச்சலாக பேச வைக்கிறது. இவர் இறந்தால் வெடி வெடித்துக் கொண்டாடுவோம் என்கின்ற அளவுக்கு நடிகைகளும் இவர் மீது  காட்டமாக இருக்கின்றனர்.

Also Read: பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. பயில்வானை கொத்து பரோட்டா போட்ட நடிகர்

தயாரிப்பாளர் கே ராஜன்: மூத்த தயாரிப்பாளர் என்ற மரியாதைக்காக பிரபலங்கள் பலரும் அவர்களது படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இவரை கூப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் கூப்பிடுவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. இவர் பேசுவதெல்லாம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். அதனால் அவர்களது விழாவும், ப்ரமோஷனும் படுச்சோராக நடந்து விடும். அதிலும் விஜய், கமல், ரஜினி, அஜித் போன்ற டாப் நடிகர்கள் எல்லாம் சம்பளம் அதிகமாக வாங்குவதுதான் படத்தின் பட்ஜெட் எகிறுவதற்கு முக்கிய காரணம் என்று பகிரங்கமாக சாடினார். இப்படி மேடைகளில் மட்டுமல்ல யூடியூப் சேனல்களிலும் பிரபலங்களை மரியாதை குறையாக இஷ்டத்திற்கு பேசி பணம் பார்த்து கொண்டிருக்கிறார். 

ப்ளூ சட்டை மாறன்: தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் அந்த படத்தை குறித்து, அவரது பாணியில் திரைக்கதை எழுதி ஓட்டிவிடுவார். படாத பாடுபட்டு ஒரு படத்தை எடுப்பதற்கு பலரும் தங்களது உடல் உழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசால்டாக அந்த படத்தை மொக்கை படம் என சொல்லி விடுவதால் இவர் மீது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கொலவெறியில் இருக்கின்றனர். அதிலும் சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தை கிழித்து தொங்க விட்டிருந்தார். இதனால் தளபதி ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கினர். இருந்த போதிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து வெளியான ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கும் விமர்சனம் யூடியூப் சேனலில் செம டிரண்ட் ஆகி கல்லா கட்டுகிறது. 

Also Read: பண்ணை வீட்டில் ஒன்னும் பண்ண முடியலன்னு கடும் ஆதங்கம்.. வடிவேலு பார்ட்னரிடம் பஞ்சரான பயில்வான்

செய்யாறு பாலு: சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையை பற்றியும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் உண்மை போலவே அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் செய்யாறு  பாலுவின் ஒவ்வொரு இன்டர்வியூவும் இணையத்தில் தாறுமாறாக ட்ரெண்ட் ஆகிறது. இவர் மற்ற யூடியூப்பர் போல கொச்சையாக பேசவில்லை என்றாலும், நடிகர் நடிகைகளுக்கு திரை மறைவில் என்ன நடந்தது என்பதை அவர்களது அனுமதி இல்லாமலே பல ரகசியத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக அஜித், கடனில் இருக்கும் போது கூட வெளிநாட்டு குளிர்பானத்திற்கு நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் விஜய் அந்த  சமயத்தில் செல்வந்தராக இருந்த போதும் 2 கோடியை வாங்கிக் கொண்டு, அந்த விளம்பரத்தை நடித்துக் கொடுத்தார் என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து பெரும் பரபரப்பு கிளப்பினார். இது மட்டுமல்ல இதே போன்று இவர் பேசும் ஒவ்வொரு வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி நல்ல காசு பார்க்கிறார்.

Also Read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

சவுக்கு சங்கர்: அரசியல் பிரபலங்களைப் பற்றி கடுமையாக சாட கூடிய சவுக்கு சங்கர், யூடியூப் மூலம் தான் ரொம்பவே பேமஸ் ஆனார். இவர் ஆளுங்கட்சியின் அரசியலை எதிர்த்துப் பேசியும் அவர்களது ஆட்சியில் நடக்கும் ஒரு சில அசம்பாவித சம்பவங்களான கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பு, கோவை குண்டுவெடிப்பு போன்ற தவறுகளை எல்லாம் தனக்கு சாதகமாக பேசி யூடியூபில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த ஐந்து பிரபலங்கள்தான் காசுக்காக கண்டபடி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பயில்வானின் அழிச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

- Advertisement -

Trending News