5 வருடமாக கிட்னி பெயிலியர், என் வாழ்க்கையை காப்பற்றியவர்கள்… பொன்னம்பலத்தின் மறுபக்கம்

நடிகர் பொன்னம்பலம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக கிட்னி பெயிலியரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவருக்கு பொருளாதார ரீதியாக உதவும் நடிகர்களை பற்றி பேசியுள்ளார். பொன்னம்பலம் முதலில் ஸ்டண்ட் மேனாக இருந்தவர்.

ரஜினி, கமல் படங்களில் சண்டை காட்சிகளில் வருவார். அதன் பிறகு மெயின் வில்லனாக பல படங்களில் நடித்திருக்கிறார். நாட்டாமை படத்தில் இவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். அதன் பின் முத்து, அமர்க்களம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார்.

Also Read: சிரிப்பு வில்லனாக மாறிய 6 டெரர் நடிகர்கள்

தமிழ் படம், பொன்னர் ஷங்கர் திரைப்படங்களுக்கு பிறகு பொன்னம்பலம் அவ்வளவாக படங்களில் நடிப்பதில்லை. திரையில் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. கடத்த 2011 ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பொன்னம்பலம், 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா பார்ட்டியில் இணைந்தார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். அங்கு பெண் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவதாக இவர் மீது குற்றசாட்டு எழுந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பொன்னம்பலம் தனக்கு கிட்னி பெயிலியர் எனவும், நடிகர் சரத்குமார் தான் கடந்த 6 வருடங்களாக தன்னுடைய செலவை பார்த்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Also Read: கம்பீரமாக இருந்த கபாலியை காலி செய்த படம்

உடல்நிலை சரியில்லை, மருத்துவத்திற்கு பணமும் இல்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிட்டத்தட்ட 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களிடம் உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார்.

இவ்வளவு படங்கள் நடித்தும் எனக்கென்று எந்த ஒரு சொத்துகளையும் சேர்த்து வைக்காதது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். நடிகர் தனுஷும் தனக்கு உதவி வருவதாக கூறியிருக்கிறார். மேலும் விஜயகாந்த் அவருக்கு மிகவம் பிடித்த நபர், அவர் இப்போது இருக்கும் நிலையை நேரில் கண்டால் தான் இறந்தே போய் விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

Also Read: முரட்டு வில்லன் பொன்னம்பலத்திற்கு இப்படி ஒரு சோதனையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்