நல்லா போய்க் கொண்டிருக்கும் போது மொக்கை பண்ணிய விஜய் ஆண்டனி.. கடும் நஷ்டத்தை கொடுத்த 5 படங்கள்

இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி இப்போது ஹீரோவாக படங்களில் கலக்கி கொண்டிருக்கிறார். அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் நடுவில் சில மொக்கை படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களை நஷ்டமடைய செய்துள்ளார். அந்த 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

திமிரு புடிச்சவன் : கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு புடிச்சவன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாமல் தோல்வியை தழுவியது.

Also Read : நேருக்கு நேராக விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய் ஆண்டனி.. உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட படம்

காளி : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனேனா மற்றும் பலர் நடிப்பில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காளி. விஜய் ஆண்டனியின் கேரியரில் இந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாதுரை : விஜய் ஆண்டனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வெளியானபடம் அண்ணாதுரை. சீனிவாசன் இயக்கத்தில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் வசூலை பொருத்தவரையில் பெரிய அளவில் லாபம் எதுவும் ஏற்படவில்லை.

Also Read : பேசக்கூட முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி.. ஒரே விபத்தால் திசை மாறிய வாழ்க்கை

கொலைகாரன் : ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் கொலைகாரன். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது. வசூலிலும் பெருத்த அடி வாங்கியது.

தமிழரசன் : பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் தமிழரசன். இந்த படம் எப்போது வந்தது என்று தெரியாத அளவுக்கு ஓடி சென்றது. மேலும் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பு நிறுவனம் திணறியது.

Also Read : படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

Next Story

- Advertisement -