வறுமையை வைத்து எடுக்கப்பட்ட மறக்க முடியாத 5 படங்கள்.. வேலையில்லா இளைஞரின் பசி கொடுமையை காட்டிய கமல்

5 Unforgettable Films: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கதைக்களத்தை கொண்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் வறுமையை வைத்து மக்களின் மனதை தொட்ட மறக்க முடியாத 5 படங்களை பற்றி பார்ப்போம்.

துலாபாரம்: தமிழ் சினிமா வரலாற்றில் இந்த படம் தான் உச்சகட்ட வறுமையை காட்டியிருக்கும். எந்த அளவிற்கு என்றால், தன்னுடைய குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் சாவதை விட விஷம் வைத்து கொன்று விடலாம் என தாயே நினைத்து, 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விடலாம் என்ற முடிவெடுத்து, தன்னுடைய பிள்ளைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து விடுவார். அவரும் அதே உணவை சாப்பிடுவார். கடைசியில் அந்த மூன்று பச்ச குழந்தைகளும் இறந்து விட, இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்கிறார். பார்ப்பதற்கே பதைபதைக்க வைத்த இந்த படம் வறுமையின் கொடுமையை காட்டியிருக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் வறுமையின் நிறம் சிகப்பு. இந்தப் படத்தில் வேலை இல்லாமல் திண்டாடும் பேச்சுலர் ஆக இருக்கும் கமல், தன்னுடைய அறைக்கு ஸ்ரீதேவி வந்தபோது அவர் முன் தனது பசியை காட்டிக்க கூடாது என நண்பர்களுடன் சேர்ந்து செய்த டிராமா நிஜமாகவே அந்த படத்தை பார்ப்போரை கண் கலங்க வைக்கும். அந்த அளவிற்கு இந்த படத்தில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வறுமையை காட்டியிருப்பார்கள்.

Also Read: போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

ஆறிலிருந்து அறுபது வரை: இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மூத்த மகனாக சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்கிறார். ஒரு கட்டத்தில் தம்பி தங்கைகளை வருமானத்திற்கு மிஞ்சி கான்வென்டில் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு உயர்த்துகிறார். ஆனால் வளர்ந்த பின்பு அவர்கள் ரஜினியை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. அதைவிட கொடுமை என்னவென்றால் தன்னுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் ரஜினி வறுமையின் காரணமாக சேரி பகுதியில் குடியேறி அச்சகத்தில் வேலை பார்ப்பார்.

அங்கு அவர் எழுதிய கதை ஒன்றை வெளியிட முடியுமா என்றும் கேட்கிறார். ஆனால் அந்தக் கதை வெளியாக்குவதற்கு முன் தீ விபத்தில் அவரின் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி விட்டு மனைவி இறந்து விடுகிறார். அவர் இறந்த பிறகு வந்த காப்பீட்டுத் தொகை மற்றும் அவர் எழுதிய கதையும் பேமஸ் ஆனதால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை ரஜினி அடைகிறார். இருப்பினும் தம்பி தங்கைகள் அவமானப்படுத்தி வறுமையில் அவர் பட்ட கஷ்டம் இந்த படத்தை பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

கற்றது தமிழ்: இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான மிக யதார்த்தமான படம் தான் கற்றது தமிழ். இதில் ஜீவா, அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெறுப்பார்கள். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாவிட்டாலும் விமர்சன வாயிலாக நல்ல வருகைப் பெற்றது. இதில் ஜீவா முதுகலை பட்டம் படித்தும் வேலை இல்லாமல் திண்டாடுவார். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் தன்னுடைய காதலியை கூட திருமணம் செய்து கொள்ள முடியாமல் கடைசியில் அவருடைய மனம் சமநிலையில் இல்லாமல் மன நோய்க்கு ஆளாகுவார். அதிலும் படித்தும் வறுமையின் பிணி எப்படி இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை இந்த படத்தில் ராம் காட்டியிருப்பார் .

Also Read: எல்லாரையும் தலையை சொறிய வைக்கும் H. வினோத்.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கமல்

மேற்கு தொடர்ச்சி மலை: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஏலக்காய் சாக்குகளை சுமந்து பிழைத்து வாழும் தினசரி கூலி தொழிலாளிகளின் கஷ்ட நஷ்டத்தை இந்த படத்தில் காட்டி இருப்பார்கள். இதில் கேரளாவில் சேர்ந்த சாக்கோ என்ற கம்யூனிஸ்ட் தோட்ட உரிமையாளர்களின் சுரண்டலை தடுக்க தொழில் சங்கம் அமைக்க முயற்சிக்கின்றனர். இதனால் நில உரிமையாளர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலும், அன்றாட உணவிற்காக அவர்கள் படும் பாடுகளையும் இந்த படத்தில் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்கள். இந்தப் படத்தை பார்க்கும் போதே வறுமையின் கொடுமை மனிதர்களை எந்த அளவிற்கு உழைக்க வைக்கிறது என்பது தெரிய வரும்.

Also Read: கமல் வேட்டையாடிய பார்த்த முதல் நாளே நடிகையா இது?. ஆள் அடையாளமே தெரியாமல் போன புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்