ஏற்றுக்கொள்ள முடியாத 5 காதல் தோல்வி படங்கள்.. விஜய் சேதுபதியை தவிக்கவிட்ட திரிஷா

5 Unacceptable Love Failure Movies: சினிமா என்றாலும் நிஜ வாழ்வு போல இந்த ஜோடிகள் சேர்ந்திருக்கலாம் என ரசிகர்களை சில படங்கள் ஏங்க விட்டிருக்கும். அவ்வாறு எதார்த்தமான காதல் படங்கள் வெளியாகி கிளைமாக்ஸ் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஐந்து காதல் தோல்வி படங்களை பார்க்கலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. எதார்த்தமான காதல் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் கார்த்திக் உடன் ஜெசி சேராமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

Also Read : தறி கெட்டு அலைந்த 5 வாரிசு நடிகர்கள்.. பீப் பாடல் மூலம் டி ஆர் ஐ கதறவிட்ட சிம்பு

மதராசபட்டினம் : ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதராசபட்டினம். இந்த படத்தில் சலவைத் தொழிலாளியாக இருக்கும் ஆர்யாவுக்கு வெளிநாட்டு பெண்ணான எமி ஜாக்சன் மீது காதல் ஏற்படுகிறது. இவர்கள் காதலும் கடைசியில் கை கூடாமல் போய்விட்டது.

கும்கி : விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது கும்கி படம் தான். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்து இருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் எல்லாவற்றையும் இழந்த விக்ரம் பிரபு கடைசியில் லட்சுமி மேனனின் காதலையும் இழந்துவிட்டார்.

Also Read : எப்படி போனேனோ அதேபோல திரும்பி வந்துட்டேன்.. 10 வருடத்திற்கு பின் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த விக்ரம் பிரபு

சீதா ராமம் : துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சீதாராமம். மிகவும் அழகான காதல் கதையான சீதாராமம் படத்தில் கடைசியில் துல்கர் சல்மான் மற்றும் மருணாள் தாகூர் சேராமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

96 : விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் அருமையான காதல் படமாக வெளியானது தான் 96. இப்படி ஒரு படத்தை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்று எல்லோரையும் ஏங்க வைத்தது. அதிலும் விஜய் சேதுபதியை திரிஷா தவிக்கவிடும் காட்சிகள் எதார்த்தமாக இருந்தது. இந்த படம் பார்த்த பலருக்கும் தங்களது முதல் காதலை நினைவுபடுத்தும் படியாக இருந்தது.

Also Read : 300 கோடி நஷ்டத்தை ஈடு கட்டிய மலையாள படம்.. விஜய் சேதுபதியை வைத்து லைக்கா போடும் பலே ஸ்கெட்ச்

Next Story

- Advertisement -