ஏண்டா கொன்னீங்க.! இந்த 5 நடிகர்களின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத படங்கள்

5 Unacceptable Deaths of Tamil Actors Like Kamal Suriya in tamil cinema: சினிமா ஒரு ஊடகம் தான் என்றாலும் பொழுதுபோக்குக்காக தான், நாம் படங்களை காண சென்றாலும்,படம் பார்க்கையில் படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது இயக்குனரின் படைப்பு. படம் முடிந்த பின்னும் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர மறுக்கிறது நம் மனங்கள் அந்த வகையில் படத்தில் ஏற்படும் நடிகர், நடிகையின் மரணங்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே அமைந்து விடுகிறது அப்படியான சில படங்கள்,

தசாவதாரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில் இறுதியில் வந்த சுனாமியில் இறந்த வின்சென்ட் பூவராகவன் மரணம், மண்ணை காப்பாற்றி அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தவர் எதற்காக இறந்தார் என அனைவரையும் கோபத்துடன் கேள்வி கேட்க வைத்தது. காரினுள் உள்ள குழந்தைகளை மீட்கும்போது கடப்பாரை குத்தி காலை எடுக்க முடியாமல் தத்ரூபமாக இருந்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்தது.

பருத்திவீரன்:  கிளைமாக்ஸ் இல் பிரியாமணி தலையில் ஆணி குத்தி கொடூரமாக கார்த்தியின் நண்பர்களால் தவறாக நடந்து கொள்ளப்பட்டு இறக்கும் சீனை அமீருடன்  சேர்ந்து படம் பார்த்த யுவன் சங்கர் ராஜா தேம்பித் தேம்பி அழுதாரம். திரைத் துறையில் உள்ளவர்களுக்கே இது சினிமா என்று நம்ப முடியாத அளவு நடிகையின் இறப்பு கண்ணீரை வரவழைத்தது எனலாம்.

Also read : மணிரத்னத்தால் முடியாமல் போன காரணம் காரியம்.. மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்

கஜினி:  சூர்யா அசின் நயன்தாரா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினியின் படத்தை விளம்பர மாடலாக அசின் ஒருவரே ஆரம்பம் முதல் ரசிகர்களை என்டர்டைன் பண்ணிக் கொண்டிருந்தார்.  திடீரென எதிர்பாராத வகையில் குழந்தை கடத்தல் கும்பலால் நிகழும் அவரின் இறப்பு அனைவரையும் பாதிப்படைய செய்தது.

காக்க காக்க: “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே” என படம் முழுவதும் அழகாகவும் காதல் கொஞ்சம் வசனங்களுடனும் வலம் வந்த மாயா என்கிற ஜோதிகாவை கடத்திய போது, எப்படியாவது அன்பு செல்வன் மீட்கமாட்டாரா என்று கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் இருக்கை  நுனியில் அமரந்தனர்.

பிதாமகன்: பாலாவின் எதார்த்தமான கதையில் உருவான பிதாமகன், விக்ரம் சூர்யாவிற்கு திருப்புமுனையாக இருந்தது.  கதை படி விக்ரமை அரவணைக்கும் ஒரே கதாபாத்திரமாக சூர்யாவை கொண்டாட வைத்து இறுதியில்  விக்ரம்க்காக மறைந்தது போல் உணர்வை ஏற்படுத்தி ரசிகர்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தார் பாலா.

Also read : 3 வருடங்களுக்கு வரிசை கட்டி நிற்கும் கமலின் 7 படங்கள்.. விக்ரமை மிஞ்சுமா கமலின் KH237?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்