லியோ படத்தில் இதுவரை தெரியாத 5 ரகசியங்கள்..150 நாளா மைனஸ் டிகிரியில் விஜய் செய்த வேலை

Vijay-Leo: லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காத குறையை போக்க லோகேஷ் யூடியூபில் பிரபல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதனால் லியோ படத்தைப் பற்றிய நிறைய செய்திகள் இப்போது இணையத்தில் உலா வர தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் லியோ படத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஐஎம்எக்ஸ் ரெட் வி ரெப்டர் 8k கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கண்டிப்பாக திரையில் லியோ படம் வேற லெவலில் காட்சி இருக்க உள்ளது. அடுத்ததாக தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நிறைய செகண்ட் பார்ட் படங்கள் வெளியாகி இருக்கிறது.

Also read: விஜய்க்கு பெரிய முட்டு கொடுக்கும் அண்ணன்.. நம்ம குட்டு வெளி வந்துரும்னு நியாயப்படுத்தும் நடிகர்

உலக நாயகன் கமலஹாசன் கூட இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால் விஜய் இதுவரை தனது படங்களின் இரண்டாம் பாகம் எடுத்ததில்லை. ஆனால் கண்டிப்பாக லியோ படத்தின் செகண்ட் பார்ட் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அப்படி தான் கிளைமாக்ஸ் காட்சி எடுத்திருக்கிறார்களாம்.

ஆகையால் லியோ படத்தின் மூலம் முதல் முறையாக விஜய் செகண்ட் பார்ட் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது. மைனஸ் டிகிரியில் கிட்டதட்ட 150 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் விஜய் லியோ படத்தின் பூஜை போட்ட போது எப்படி இருந்தாரோ அதே எடையில் கடைசி வரைக்கும் இருந்தார்.

Also read: நாங்கல்லாம் அப்பவே அப்புடி.. நாசுக்காக காய் நகர்த்தி விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் முக்கிய புள்ளி

இதற்காக தினமும் 40 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வாராம். அதோடு மட்டுமல்லாமல் இந்த 150 நாட்களும் ஒரே மாதிரியான உணவு முறையை தான் விஜய் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சட்டையில்லாமல் நடிக்கும் காட்சிகள் எடுப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூடுதலாக உடற்பயிற்சி செய்து ஆர்ம்ஸ் ஏற்றிக் கொள்வாராம்.

மேலும் நான்காவதாக இந்த படத்தில் பிரபல யூடியூபர்களான இர்பான் மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் நடித்துள்ளார்கள். இதுவரை இவர்கள் லியோ படத்தில் நடித்துள்ளார்கள் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இர்பான் மன்சூர் அலிகானின் மகனாக நடித்திருக்கிறார். மேலும் இன்னும் என்னென்ன ரகசியங்களை லியோ படத்தில் லோகேஷ் மறைத்திருக்கிறார் என்பது படம் வெளியானால் தெரிய வரும்.

Also read: பிக் பாஸ் சீசன் 7ல் வெளிவந்த லியோ சீக்ரெட்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்