வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

2வது மனைவியாக கழுத்து நீட்டிய 5 நடிகைகள்.. அந்தரங்க உறவால் முறிந்த விஷ்ணு விஷால் திருமணம்

சினிமாவில் உச்சத்தில் இருந்த பல சூப்பர் ஹிட் நடிகைகள் தங்களுடைய சொந்த வாழ்க்கை என்று வரும்போது யோசிக்காமல் பல தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அதில் ஒன்று தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது. ஒரு சில நடிகைகளுக்கு அது காதலோடு முடிந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு திருமணம் வரை செல்கிறது. ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.

போனி வர்மா: இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான பிரகாஷ்ராஜின் இரண்டாவது மனைவி தான் இந்த போனி வர்மா. பிரகாஷ்ராஜ் ஏற்கனவே நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர், மனைவியை விட்டு பிரிந்து போனி வர்மாவை திருமணம் செய்திருக்கிறார்.

Also Read:பப்ளிசிட்டிக்காக நடிகை செய்த கேவலம்.. ஓவர் ஆட்டம் போட்டதால் விழுந்த அடிo

ஜுவாலா கட்டா:  நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தன்னுடைய மனைவியின் மீது ஏகப்பட்ட குறைகளை கூறி, விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சிறிது நாட்களிலேயே பிரபல பேட் மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இந்த காதலுக்காக தான் மனைவியை விவாகரத்து செய்தார் என்பது அதன்பின்னர் தான் தெரிந்தது.

ஸ்ரீதேவி: இந்திய சினிமா உலகின் அழகு பதுமையாக பார்க்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவரை திருமணம் செய்து கொள்ள கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல உச்ச நட்சத்திரங்கள் தவம் பண்ணி கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை இவரை திருமணம் செய்து கொண்டார். போனி கபூருக்கு இது இரண்டாவது திருமணம்.

Also Read:பட வாய்ப்பு இல்லைனாலும் கோடியில் புரளும் நடிகை.. சங்கதி இதுதான்

சீதா : நடிகை சீதா, புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது நடிகர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். கல்யாணம், குழந்தை என செட்டில் ஆன சீதா, மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்த போது, அவருடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு, பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்தார். கடைசியில் சதீஷும் சீதாவை கழட்டி விட்டுவிட்டார்.

காவியா மாதவன்: நடிகை காவியா மாதவன் மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்த இவர், நடிகை மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழியும் ஆவார். இருந்த போதிலும் தோழியின் கணவரான திலீப்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

Also Read:நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

- Advertisement -

Trending News