பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் 5 தமிழ் ஹீரோக்கள்.. கமலின் காலை வாரி விட்ட மோசமான அரசியல்

5 Tamil Heroes went to Bollywood: 80-களில் தமிழில் எந்த அளவிற்கு முன்னணி நடிகராக கமல் வளர்ந்து கொண்டு இருந்தாரோ, அதே சமயத்தில் ஹிந்தியிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட ஏ தோ கமால் ஹோகயா, சாரா சி சிந்தகி, சத்மா போன்ற பல படங்களில் நடித்து அசத்தி ரசிகர் கூட்டத்தை இழுத்தார். ஆனால் பாலிவுட்டில் உள்ள மோசமான அரசியலால் வளர விடாமல் காலை வாரி விட்டனர். இதைப் புரிந்து கொண்ட பின் கமல் தனது தாய் வீடான தமிழ் சினிமாவிற்கே வந்து தொடர்ந்து பல ஹிட் படங்களை தற்போது வரை கொடுத்துக் கொண்டுள்ளார். இவரைப் போலவே சமீப காலமாக பாலிவுட் வரை சென்ற 5 தமிழ் பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

விஜய் சேதுபதி: ஹீரோ, வில்லன், திருநங்கை, வயதான கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தியிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஹிந்தியில் அறிமுகமான படம் தான் மும்பைகார்.

இந்த படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக். மும்பைகார் படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கினார். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே விஜய் சேதுபதி ஹிந்தியில் பர்சி என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.

Also Read: கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7.. நாள் குறித்த விஜய் டிவி

தனுஷ்: தமிழ் சினிமாவில் அசுரனாக தன்னுடைய நடிப்பின் மூலம் மிரட்டிக் கொண்டிருக்கும் தனுஷ், ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா என்ற படத்தில் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்று டைட்டிலில் ரிலீஸ் ஆனது. அதன் தொடர்ச்சியாக ஷமிதாப் என்ற ஹிந்தி படத்திலும், அதன்பின் அட்ரங்கி ரீ என்ற படத்தில் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தையே உருவாக்கி வருகிறார். இதனால் தனுசுக்கு பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது.

நயன்தாரா: தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா முதல் முதலாக பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கப் போகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விரைவில் ப்ரமோஷன் வேலைகளையும் துவங்க உள்ளனர். இந்த படத்தின் மூலம் நயன்தாராவிற்கு பாலிவுட்டிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: முழுசாய் சொதப்பிய அட்லீ.. ஜெராக்ஸ் போல் அப்படியே ஷாருக்கானை வைத்து விளையாடிய சின்ன தம்பி

பிரியாமணி: பருத்திவீரன் படத்தின் மூலம் சிறந்த நடிகைகான தேசிய விருதைப் பெற்ற பிரியாமணி, அதன் பிறகு தொடர்ந்து செம போல்டான கதாபாத்திரங்களை எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட்டிற்கு ஃபேமிலி மேன் என்ற இந்தி வெப் தொடரில் நடித்ததன் தொடர்ச்சியாக இப்போது அஜய் தேவ்கான், அர்ஜூன் ராம்பால் போன்றவர்களுடன் இணைந்து ஒரு பாலிவுட்டில் படத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்: கோலிவுட்டின் உச்ச நடிகராக இருக்கக்கூடிய அஜித் 2001 ஆம் ஆண்டு வெளியான அசோகா என்ற படத்தில் சுசிமா என்ற கேரக்டரில் நடித்து பாலிவுட்டிற்க்கு என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் அஜித் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஹிந்தி பதிப்பில் அமிர்தா பச்சன் நடித்த கேரக்டரை தமிழில் அஜித் நடித்தார்.

Also Read: கேஜிஎஃப் இயக்குனரை கூப்பிட்ட அஜித்.. அப்ப கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் சேர போவது உறுதி.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்