முழுசாய் சொதப்பிய அட்லீ.. ஜெராக்ஸ் போல் அப்படியே ஷாருக்கானை வைத்து விளையாடிய சின்ன தம்பி

atlee-jawan
atlee-jawan

Atlee, Jawan: அட்லீயை என்னதான் காப்பி இயக்குனர் என்று கேலி, கிண்டல் செய்தாலும் தொடர்ந்து வெற்றி படங்கள் மட்டும் தான் கொடுத்து வருகிறார். இவருடைய முதல் படமான ராஜா ராணி படத்திற்கு அடுத்தபடியாகவே தளபதி விஜய்யின் பட வாய்ப்பு அட்லீக்கு வந்தது. இவர்களது முதல் கூட்டணியை வெற்றி பெற விஜய் இவரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அதன் பிறகு மெர்சல், பிகில் என தொடர்ந்து இவர்களது கூட்டணியில் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ கிட்டதட்ட நான்கு வருடங்களாக ஜவான் படத்தை எடுத்து வருகிறார். இப்போது அவர் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

Also Read : ஒரு வீடியோவிலே 5 படங்களை காப்பியடித்திருக்கும் அட்லீ.. இது என்ன ஜவானுக்கு வந்த சோதனை

அதுதான் இப்போது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது ஜவான் படத்தை அட்லீ முழுசாக சொதப்பி உள்ளார் என பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது இந்த வீடியோவில் ஷாருக்கானை பார்த்தால் அப்படியே தளபதியை பார்ப்பது போல் இருக்கிறது.

விஜய் மனதில் வைத்துக் கொண்டே ஜவான் படத்தையும் எடுத்திருக்கிறார் அட்லீ. நிறைய காட்சிகளில் விஜய்யை ஞாபகப்படுத்தும் படியாக இருக்கிறது. அந்த வகையில் ட்ரெயினில் ஷாருக்கான் பாட்டு பாடிக்கொண்டே எதிரிகளை சண்டையிட்டு அடிக்கும் காட்சி, விஜய் போல வசனம் பேசுவது என தளபதியின் ஜெராக்ஸாக அட்லீ படத்தை எடுத்திருக்கிறார்.

Also Read : மூட்டை முடிச்சை கட்டிய அட்லீ.. ஷாருக்கான் விட்ட டோஸால் ஜவானுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யை வைத்து எடுத்ததால் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இந்த படத்தையும் தளபதியின் சாயலிலே எடுத்து வைத்திருக்கிறார். ஷாருக்கானுக்கு என்று பாலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. பதான் வெற்றியால் அவர்கள் ஜவான் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜவான் படத்தை ஒரு கமர்சியல் படமாக அதுவும் முழுக்க முழுக்க விஜய்யின் சாயலில் எடுத்து வைத்திருக்கிறார் அட்லீ. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுமா என்ற சந்தேகம் இப்போதே எழுந்து விட்டது. விஜய் அண்ணன் மீது எவ்வளவு பாசம் இருந்தாலும் இப்படியா பண்ணுவது என அட்லீயை நெட்டிசன்கள் விலாசி வருகிறார்கள்.

Also Read : கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

Advertisement Amazon Prime Banner