சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

சிரிப்பழகி ஆக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தென்னிந்திய நடிகையான நடிகை சினேகாவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 2001ஆம் ஆண்டு என்னவளே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சினேகா அதன்பின் எண்ணற்ற படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையிலும் ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொள்கிறார். இவருடைய பிறந்த நாளான இன்று அவருடைய நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்களை இளசுகள் சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்

உன்னை நினைத்து: 2002 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தில் சூர்யா-சினேகா ஜோடியாக நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் லைலா சூர்யாவை நம்பவைத்து ஏமாற்றியது போன்றும், அதன் பிறகு வந்த சினேகா சூர்யாவின் பழைய காதலை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய காதல் தெய்வீகமானது என்பதை காட்டி ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருப்பார்.

வசீகரா: 2003 ஆம் ஆண்டு செல்வபாரதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய்-சினேகா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார்கள். இதில் இவர்கள் இருவரும் எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டுக் கொண்டாலும், அதிலும் அழகாக தெரியும் அவர்களின் காதல் ரசிகர்களை மேலும் கவர்ந்தது. இதில் சினேகாவின் நடிப்பு இளசுகளை வசியம் செய்யும் வகையில் இருந்தது.

Also Read: 28 வருட சினிமா வாழ்க்கையில் தளபதி மிஸ் பண்ண 6 படங்கள்.. அடேங்கப்பா! எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆச்சே

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: கமலஹாசன், சினேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தில் மருத்துவ கல்லூரி தலைவராக உள்ள பிரகாஷ்ராஜ் தன் மகள் சினேகாவுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடுகிறார். ஆனால் கமலஹாசன் போலி டாக்டர் என தெரிந்தபின் அவரைக் கல்லூரியிலிருந்து வெளியே ஏற்றுகிறார்.

கடைசியில் தன் முட்டாள்தனத்தை புரிந்துகொண்ட பிரகாஷ் ராஜ், கமலுக்கு தன மகளை திருமணம் செய்து வைக்கிறார். இதில் சினேகாவின் நடிப்பு மிக யதார்த்தமாகவும் இயல்பாகவும் இருந்ததால் இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆட்டோகிராப்: மூன்று காலங்களில் மூன்று நபர்களுடன் ஏற்படும் காதல் என அழகாக செதுக்கி இருப்பார் இதில் சினேகாவும் ஒரு காதலியாக நடித்திருப்பார். இந்த படம் பலரது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தி சூப்பர் ஹிட் அடித்ததுடன், அந்த ஆண்டுக்கான தேசிய விருது வென்றது இப்படம்.

Also Read: தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவனின் 5 பிரமாண்ட படங்கள்.. வீடியோ லிங்க்

புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் அதிரடி ரவுடிசம் கதைகளை கொண்ட படம் புதுப்பேட்டை. தனுஷ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஒரு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. இதில் கதாநாயகியாக பல படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த சினேகா கவர்ச்சியாக மாறி ரசிகர்களை திணறடித்தார். இப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் இன்றும் ரசிகர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சலிப்பின்றி பார்க்கும் படங்களின் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் இளசுகளை சிரிப்பால் சிதறடித்த சினேகாவிற்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு சோஷியல் மீடியாவில் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Also Read: கவர்ச்சி காட்டியதால் பட வாய்ப்பை இழந்த 3 பிரபல நடிகைகள்.. பணத்தாசை யாரை விட்டுச்சு

- Advertisement -