Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவனின் 5 பிரமாண்ட படங்கள்..
செல்வராகவன் வித்தியாசமான திரைக்கதையை விரும்பும் இயக்குனர்களில் ஒருவர். தமிழ்,தெலுங்கு படங்களில் பிரபல இயக்குனரான இவர் சாதாரண மசாலா படங்களில் ஆர்வம் இல்லாதவர்.
பெரும்பாலும் இவரது படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு கதைகளை அமைப்பதில் இவர் வல்லவர்.
இவரது படைப்புகளில் பிரமிக்க வைத்த படங்கள் சில,
காதல் கொண்டேன் – செல்வராகவன் இயக்கிய முதல் படம் காதல் கொண்டேன். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பிலிம்ஃபேர் விருது வரை சென்றது. செல்வராகவனுக்கு பெரும் பெயரை தேடித்தந்தது. தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
7/G ரெயின்போ காலனி – காதல் காவியமாக உருவான இந்த படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகனாக இன்றும் பல காதல் ஜோடிகள் உள்ளனர். ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காதல் கதையாக தோன்றி பல ரசிகர்களை இப்படம் கவர்ந்தது. ரவி கிருஷ்ணாவுக்கு இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
ஆயிரத்தில் ஒருவன் – வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தது என்று கூறலாம். பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
புதுப்பேட்டை – அதிரடி ரவுடிசம் கதைகளை கொண்ட படம் புதுப்பேட்டை. தனுஷ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஒரு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. இப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பல திரைப்பட ரசிகர்கள் இந்த படத்தினை மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடுகிறார்கள்.
மயக்கம் என்ன – விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம். இப்படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்காக பல விருதுகளை வென்றுள்ளார் செல்வராகவன். இப்படம் திரைத்துறையில் பெரிதாக பேசப்பட்ட படமாகும்.
