பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த 5 படங்கள்.. முருங்கைக்காயை வைத்து ஃபேமஸான ஹீரோ

சினிமா துறையில் இயக்குனராகவும், நடிகராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் தான் நடிகர் கே பாக்கியராஜ். அதிலும் தான் இயக்கிய படங்களின் மூலமே வித்தியாசமான கதாபாத்திரங்களை உட்பகுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். அப்படியாக பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ஐந்து படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

முந்தானை முடிச்சு: கே பாக்யராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்கியராஜ் உடன் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் கிராமத்து சூழ்நிலையில் வசித்து வரும் மாணவர்களின் கல்வித் திறனையும் மேம்படுத்தும் ஆசிரியராக இப்படத்தில் பாக்கியராஜ் நடித்து அசத்தி இருப்பார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருங்கைக்காய் சீன் ஆனது பாக்கியராஜை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எனலாம். அந்த அளவிற்கு படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

Also Read: 80-களில் கமலை மிஞ்சிய சம்பளம் வாங்கிய பாக்யராஜ்.. டாப் 6 நடிகர்களின் சம்பள லிஸ்ட்

சுந்தர காண்டம்: பாக்கியராஜ் மற்றும் பானுப்ரியா நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தர காண்டம். மேலும் பாக்கியராஜ் எழுதி, இயக்கிய இப்படம் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. மேலும் இவர்களுடன் சிந்துஜா, கணேஷ்கர், ஜூனியர் பாலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சண்முகமணி என்னும் கதாபாத்திரத்தில் சுட்டித்தனமான மாணவியின் அட்ராசிட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் தமிழ் ஆசிரியராக பாக்கியராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இப்படம் அன்றைய இளசுகளின் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாகவும் அமைந்திருந்தது.

இது நம்ம ஆளு: இயக்குனர் பாலகுமாரன் இயக்கத்தில் கே கோபிநாதன் தயாரிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது நம்ம ஆளு. இதில் பாக்கியராஜ் உடன் ஷோபனா, குமரிமுத்து, கலைஞானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் கோபால்சாமி என்னும் அப்பாவித்தனமான கேரக்டரில் பாக்கியராஜ் பிராமணராக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். மேலும் இப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Also Read: இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்த பாக்யராஜின் முதல் கல்யாணம்.. மனைவி எப்படி இறந்து போனார் தெரியுமா? 

தாவணிக்கனவுகள்: பிரவீனா ஃபிலிம் தயாரிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாவணிக் கனவுகள். இதில் பாக்கியராஜ் உடன் ராதிகா, சிவாஜி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் தனது உடன் பிறந்த சகோதரிகளின் வாழ்க்கையை போராடி கரை சேர்க்கும் ஒரு பாசம் மிகுந்த அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் அனைவரையும் உருக வைத்திருப்பார் என்று சொல்லலாம். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

ராசுக்குட்டி: பாக்கியராஜ் இயக்கத்தில் மீனா பஞ்சு தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராசுக்குட்டி. இதில் பாக்கியராஜ் உடன் ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பாக்கியராஜ் இப்படத்தில் ராசுக்குட்டி என்னும் கேரக்டரில்  பணக்காரப் பண்ணையாரின் மகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் படிப்பறிவில்லாத இவர் படித்த பெண்ணை திருமணம் செய்வதால் பல சிக்கல்களை சந்திப்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை  பெற்றது.

Also Read: குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாக்யராஜ் பட ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்