40 வயது மேல் சாதித்து காட்டிய 5 நடிகர்கள்.. முரட்டு ஹீரோவாக கலக்கிய ராஜ்கிரன்

Actor Rajkiran: தமிழ் திரையுலகம் சிறந்த தொழில் துறையாக ஆரம்பகாலத்திலிருந்தே அனைத்து வயதினரையும் கவரும் வகையில் மிகவும் பிரபலமாக இருக்கும் துறையாகும். சிறந்த கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, தொழில்நுட்பம் ஆகிய திறன்களுடன் எவர் வந்தாலும் பார்வையாளர்களுக்கு சிறந்த வகையில் ரசிக்கும் படியாக வழங்கினால் அவர்கள் இத்துறையில் புகழ் பெறுகிறார்கள். 40 வயதைத் தாண்டி தன் தனித் திறமையால் இத்துறையில் பிரபலம் அடைந்தவர் பலர். அவர்களில் 5 நடிகர்கள் பற்றி இந்த பதவில் பார்ப்போம்.

எம். ஜி. ஆர்: தமிழ் சினிமா உலகிலும், தமிழக அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வாழ்ந்து மறைந்தவர் எம். ஜி. ஆர். அவர்கள். தமிழ் மக்களின் குறிப்பாக ஏழை எளிய மக்களின் இதயங்களின் “இதயக்கனி”யாக இன்றுவரை நீக்க மற நிறைந்துள்ளவர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவில் எனர்ஜி பூஸ்ட்டராக திரையுலகிற்கும் ரசிகர்களும் உற்சாகமும் உத்வேகமும் அளிப்பவர் எம். ஜி. ஆர். 130க்கும் மேல் திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். அவர்கள் பல அதிரடி மற்றும் நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை வழங்கியுள்ளார். இவர் திரைப்பட பாடல்கள் ஒவ்வொன்றும் இப்பொழுதும் காலர் டியூனில் இடம் பிடிக்கும் அளவிற்கு உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் போன்ற பாடல்கள் அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்தது. பல படங்கள் நடித்து நடிப்பிலும் அரசியலிலும் வெற்றி வாகை சூடினார் எம்.ஜி.ஆர். “மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்” என்ற படத்தில் ஹீரோவாக தனது 61வது வயதில் நடித்து ரியல் ஹீரோ வானார் எம்.ஜி.ஆர்.

Also Read: அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்.. கவுண்டமணி இடத்திற்கு அடிபிடி போட்ட 5 காமெடியன்கள்

கவுண்டமணி: ஒரு சில படங்களில் தென்ப்பட்டாலும் முதலில் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக நடித்த பின் பிரபலமானவர் கவுண்டமணி. சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக 12 படங்களில் நடித்துள்ளார். முதலில் காமெடி டிராகில் மட்டும் சிறப்பாக நடித்து வந்த கவுண்டமணி, ஹீரோவாக, வில்லனாக மற்றும் சிறிய ரோல்களிலும் நடித்து வந்தார். பிறகு ஹீரோக்களுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் துடங்கினார். முக்கியமாக சத்தியராஜ், அர்ஜுன், கார்த்திக், இவர்களுடன் சேர்ந்து சிறப்பாக லூட்டி அடிப்பார்.

கரகாட்டக்காரனில் உலக புகழ் பெற்ற காமெடி சீன்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகளின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர். “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா”, “இது உலகமகா நடிப்புடா சாமி, இவன் தொல்லை தாங்க முடியலடா சாமி” என்ற வசனங்கள் இன்றும் மீம்ஸ்களில் பயன்படுத்தபடுகிறது. தனது நகைச்சுவை நடிப்பால் தலைமுறைகள் கடந்து அனைவரையும் கவர்ந்து கவுண்ட்டர்களின் மன்னனாக வலம் வருபவர் கவுண்டமணி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் “மா வீரன்” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

ராஜ்கிரன்: திரைப்பட விநியோகிப்பாளராக ஆரம்பமாகி தயாரிப்பாளரான ராஜ்கிரன் ரெட்சன் ஆட் என்ற தனது நிறுவனத்தின் மூலம் கஸ்தூரிராஜாவுக்கு பட இயக்க வாய்ப்பு கொடுத்து அவரே ஹீரோவாக களம் இறங்கிய படம் என் ராசாவின் மனசிலே. அதேபோல் இயக்குனராக அரண்மனை கிளி படம் மூலம் அவதாரம் எடுத்தார். முரட்டு ஹீரோவாக இவர் நல்லி எலும்பு கடிக்கிற போஸ்டர்கள் அன்றைய ஹோட்டல்களில் விளம்பரத்திற்கு சாட்சி. எல்லாமே என் ராசாதான் பாசமுள்ள பாண்டியரே போன்ற ஹிட் கொடுத்த இவர் குறிப்பாக பெண் ரசிகர்கள் ஆதரவோடு புகழின் உச்சிக்கு சென்றார்.

நந்தா மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து பாண்டவர் பூமி,கோவில், சண்டக்கோழி, வேங்கை போன்ற படங்களில் பெரியவர் கேரக்டரில் சக்கை போடு போட்டார். அதுபோல் காமெடி பட்டாசாக அவர் ரசிக்க வைத்த படம் ரஜினி முருகன். பா.பாண்டி படத்தில் தனது சிறப்பான நடிப்பால் சர்ப்ரைஸ் கொடுத்தார் ராஜ்கிரண். 60 வயதான முதியவரின் காதலை சொல்லும் படமாக இப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேடி போய் வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரன்.. தலைக்கனத்தால் சினிமாவை இழந்த பிரபலம்

சுந்தர். C: தமிழ் திரைப்படங்களில் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. தமிழில் 34 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், 2006ம் ஆண்டில் வெளிவந்த தலைநகரம் படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களை காமெடி கலந்த செண்டிமெண்ட் காட்சிகளால் ரசிக்க வைத்தவர், அத்துடன் இவர் படங்கள் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் பெரும்பாலும் பார்த்து சலிப்படையச் செய்யாத படமாகவும் இருக்கும். இவர் இயக்கத்தில் மாஸ் ஹீரோ படங்களான ரஜினியின் அருணாச்சலம் கமலின் அன்பே சிவம் பெரிதும் பேசப்பட்டது. இவர் இயக்கத்தில் வெளியான திகில் நிறைந்த அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அரண்மனை நாலாம் பாகம் சிறப்பாக உருவாக்கி வருகிறது. சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வரும் முத்தினகத்திரிக்கா சுந்தர் சி.

M.S. பாஸ்கர்: எம். எஸ். பாஸ்கர் நாடக கலைஞராகவும் மற்றும் தமிழ் தொலைக்காட்சி , திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் செல்வி என்ற தொலைக்காட்சி தொடர்களில் பட்டாபியாக நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா, தசாவதாரம், சாதுமிரண்டா, சந்தோஷ் சுப்பிரமணியம், திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். டப்பிங் கலைஞரான இவர் தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து நகைச்சுவை நடிகர்களின் வரிகளை அவரே பேசி நடித்துள்ளார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் செய்துள்ளார். இயக்குனர் ராதா மோகனின் படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் தமிழ்நாடு அரசு மாநில திரைப்பட விருதில் மொழி படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் விருது மற்றும் 8 தோட்டாக்கள் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்றுள்ளார்.

Also Read: நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த 5 துணை கதாபாத்திரங்கள்.. கமலே வியந்து பார்த்த MS பாஸ்கர்

தற்போது அக்கரன் என்ற படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கின்றார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் விஸ்காம் துறை இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

Next Story

- Advertisement -