சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இருக்கும் இடம் தெரியாமல் போன 5 பாடல் ஆசிரியர்கள்.. பெயரை கெடுத்து சின்னா பின்னமாக்கிய சின்மயி

படங்களில் இடம்பெறும் பாடலுக்கு என்று ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கருத்துள்ள பாடல்களை கொடுப்பவர்கள் தான் பாடல் ஆசிரியர்கள்.

திரைக்கு பின் தோன்றும் இவர்கள் பாடல்கள் மூலம் தன் வெற்றியை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் வாய்ப்புகள் இன்றி மார்க்கெட்டை இழந்த 5 பாடலாசிரியர்கள் பற்றி இன்று காணலாம்.

Also Read:வைரமுத்துவை விடாமல் துரத்தும் சின்மயி.. அந்த மாதிரி வீடியோ இல்ல, ஆடியோ ஆதாரம் இருக்கு

பா விஜய்: இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடல் ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் படைப்புகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் தான். அந்த அளவிற்கு இப்பாடலால் நம்மை இசைமழையில் நனைய வைத்தார். தற்போது படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் பாடல்கள் ஏதும் இவர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாமரை: இவர் ஒரு பெண் பாடலாசிரியர் என்பது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். இவரின் வசீகரா என்ற பாடல் மின்னலே படத்தில் இடம் பெற்றிருக்கும். அதன்பின் பல படங்களில் பாடல் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் பாடலில் மோசமான வார்த்தைகள் இடம் பெறாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார்.

Also Read:வைரமுத்து ஸ்டுடியோவில் நடந்தது இதுதான்.. உண்மையை உடைத்த சின்மயி

வைரமுத்து: இவர் 1980ல் வந்த நிழல்கள் படத்தில் இடம்பெறும் பொன் மாலை பொழுது என்ற பாடலின் மூலம் தன் இசை பயணத்தை தொடங்கினார். அதன்பின் இவருக்கு இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் படங்களில் பல பாடல்கள் கிடைத்தது. மேலும் இவர் பத்மபூஷன், கலைமாமணி ஆகிய விருதுகளை பெற்று இருக்கிறார். அண்மையில் எழுந்த மீ டூ சர்ச்சையில் சிக்கி சின்மயியால் சின்னா பின்னமாகி எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

சினேகன்: இவர் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ஆவார். இவரின் தோழா தோழா என்ற பாடல் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் பிக் பாஸில் பங்கேற்றார். அதற்குப் பிறகு விருமன், யானை, லெஜெண்ட் ஆகிய படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது வெளிவந்த சிம்புவின் பத்து தல படத்தின் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:சமந்தாவின் வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு வைத்து சின்மயி.. விவாகரத்துக்கான காரணம் இதுதான்

கபிலன்: இவர் மெட்ராஸ் படத்தில் இடம் பெற்ற ஆகாயம் தீ பிடித்து என்ற பாடலின் உரிமைக்காரர். அதன்பின் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் என்னாச்சோ ஏதாச்சோ என்ற பாடலை எழுதியுள்ளார். இவருக்கு ஒரு சில படங்கள் கை கொடுத்த நிலையில் தற்பொழுது எந்த வாய்ப்பும் கிடைக்காமல் மார்க்கெட்டை இழந்த நிலையில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News