கமல் எழுதி மாஸ் ஹிட் அடித்த 5 பாடல்கள்.. வைரமுத்து, வாலிக்கு டஃப் கொடுத்து பட்டையை கிளப்பிய வரிகள்

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றை சொல்லலாம். அந்த அளவிற்கு தனது பங்களிப்பை முழுமையாக சினிமாவில் கொடுக்கக்கூடிய நடிகர் ஆவார். நடிகராக புகழின் உச்சியை தொட்ட இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதி பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அப்படியாக சினிமாவில் பிரபல பாடல் ஆசிரியர்களான வைரமுத்து மற்றும் வாலிக்கே டஃப் கொடுத்து தனது பாடல் வரிகளின் மூலம் பட்டையை கிளப்பியுள்ளார். அப்படியாக இவர் எழுதி சூப்பர் ஹிட் அடித்த 5  பாடல்களை இங்கு காணலாம்.

ஹேராம்: 2000 ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ஆகும். இதில் கமலஹாசன் உடன் ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” என்னும் பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாடலாகவே இருந்து வருகிறது.

Also Read: மொத்த தியேட்டரையும் கண்ணீர் சிந்த வைத்த கமலின் 6 படங்கள்.. படம் பிளாப் ஆனாலும் இளசுகளின் மனதில் நின்ற அபிராமி

மன்மதன் அம்பு: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் ஆகும். இதில் கமலஹாசனுடன் மாதவன், த்ரிஷா, சங்கீதா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “தகிட தத்தாம்” என்னும் பாடல்  இன்றைய இளைஞர்களையும் குதூகலப்படுத்தும் பாடல்களில் ஒன்றாகவே உள்ளது.

விஸ்வரூபம்: 2013 ஆம் ஆண்டு கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆகும். அதிலும் இந்தப் படத்தில் கதக்களி நடன கலைஞராக விஸ்வநாதன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள “உன்னை காணாத நாள் இன்று நான் இல்லையே” என்னும் பாடல் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாகவே இருந்து வருகிறது.

Also Read: விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

விஸ்வரூபம் 2: கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விஸ்வரூபம். 2013 ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் கமலஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள “நானாகி நதி மூலமே” என்னும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடலாகவே உள்ளது.

விக்ரம்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் ஆகும். இதில் கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற “பத்தல பத்தல புட்டியும் பத்தல” என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: அந்த மாதிரி கமல் படங்களில் நடிப்பது ரொம்ப கஷ்டம்.. நடிப்பு அசுரன் வியந்து பார்த்த கதாபாத்திரம்