ரூ.7,000 பட்ஜெட்டில் மிரளவிடும் 4 ஸ்மார்ட் ஃபோன்கள்.. கைக்கு அடக்கமா வேணுமா? இதோ லிஸ்ட்

Low Budget Smart Phones: ஒவ்வொரு காலத்திலும் விஞ்ஞானம் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல உலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நம் பாக்கெட்டிலே போனை வைத்து சுற்றும் அளவிற்கு அனைவரும் பழகிவிட்டோம். அதனால் இப்பொழுது எது இருக்கிறதோ இல்லையோ நம் கையில் போன் இல்லை என்றால் பதற்றம் அடைகிறோம்.

அந்த அளவிற்கு நாம் அனைவரும் போனில் அடிமை ஆகி விட்டோம். அதே நேரத்தில் அந்த போன் இருந்தால்தான் நமக்கு கெத்து என்று சொல்லும் அளவிற்கு ஒரு பெருமை. அதுவும் சும்மா சாதாரண போன் கிடையாது. ஸ்மார்ட் போன் இருந்தால்தான் நம்மளும் ஒரு பெரிய ஆளு என்று தோன்றும். ஆனால் அப்படிப்பட்ட போன் அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியுமா என்றால் ஒரு கேள்விக்குறி வருகிறது.

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்

ஆனால் சந்தேகமே வேண்டாம் இப்ப உள்ள டெக்னாலஜி வளர்ந்து வரும் வேலையில் அனைவரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வெறும் 7000 ரூபாய் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 4ஸ்மார்ட் போன்கள் அமேசானில் வந்திருக்கிறது. அது என்னென்ன போன்கள் அதில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சாம்சங்: சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 3000mAh பேட்டரி உள்ளது. இந்த ஃபோன் MediaTek MT6739 இருக்கிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு கோ பதிப்பில் இயங்குவதால் ஒவ்வொரு செயல் திறனும் சீராக வைத்திருக்க உதவுகிறது. இது 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது.

ரெட்மி: ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் வீடியோக்களை பார்த்தால் தெள்ளத் தெளிவாகவும் கேம்கள் விளையாடுவதற்கும் சிறந்த போன். இந்த போன் MediaTek Helio G25 உடன் வருகிறது. இது அடிப்படை மல்டி டாஸ்க் மற்றும் பல ஆப்ஸ்களை ஸ்பீடாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் பேட்டரி 5000mAh கொண்டுள்ளது.

ரியல்மி: ரியல்மி சி11 இது ரூ.7,000க்கும் கம்மியாகத்தான் இருக்கிறது. இது 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் MediaTek Helio G35 உள்ளது. இது தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் சிறந்த போனாக இருக்கிறது. மேலும் முதன்மை கேமரா 8MP மற்றும் மற்றும் முன்பக்க இருக்கும் கேமரா 5MP கொண்டுள்ளது.

நோக்கியா: நோக்கியா சி3, 5.99 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 3040mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் Unisoc SC9863A உடன் வருகிறது. இதில் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. இதுபோன்ற சில ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களை கொண்டு நம் கைக்குள் அடக்கமாக அனைவரது பாக்கெட்டிலும் இருக்கும்படி உள்ளது.

Next Story

- Advertisement -