காணாமல் போன 5 துணை நடிகர்கள்.. ஆள் அட்ரசே இல்லாமல் போன தேவதர்ஷினியின் ரமணி

Supporting Actors : திரைப்படங்கள் பல கதாபாத்திரங்களால் பின்னப்பட்டது. இதில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை நடிகர்களும் தனி பங்கு வகிக்கின்றனர். பல படங்களில் துணை நடிகர்களாக நடித்து புகழ்பெற்ற நடிகர்கள் சிலர் மாயமாய் போய்விட்டனர். அந்த வகையில் திரைப்படங்களில் தென்படுவதை குறைத்துக் கொண்ட நடிகர்களை பற்றியது இப்பதிவு.

தாமு : கே. பாலச்சந்தரின் வானமே எல்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தாமு. இவர் விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, போக்கிரி, கில்லி அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், பாட்ஷா, புன்னகை தேசம், அல்லி அர்ஜுனா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார். தாமு மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்பது தெரிந்தே, அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவரது இயற்பெயரான தாமிரபரணி என்ற பெயரில் தாமிரபரணி காமெடி ஏஜென்சி என்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளை செயல்படுத்தும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் 7 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையுடன் முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர் மாணவப் பேரவையை தொடங்கினார். கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டு காலமாக தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) நேஷனல் கவுன்சில் சார்பில் ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 என்ற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது இவருக்கு வழங்கியுள்ளது.

Also Read : விஜய்யுடனே பயணித்த உயிர் நண்பன்.. இப்போது கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

ஆனந்த் பாபு : மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த் பாபு. 1983-ல் டி. ஆரின் இயக்கத்தில் தங்கைக்கோர் கீதம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் ஆனந்த் பாபு. உதயகீதம், சிகரம், வானமே எல்லை, சேரன் பாண்டியன், புரியாத புதிர், புது வசந்தம், எம்.ஜி.ஆர். நகரில் போன்ற படங்களில் நடித்திருந்தார். நடனத்தில் மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தாலும் நடிப்பிலும் நல்ல பெயர் கிடைத்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ஏனோ வாய்ப்புகள் வராமல் போனது இவருக்கு. பின் ஆதவன் படம் மூலம் ரீ- என்டரி கொடுத்த இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின்னர் தொலைக்காட்சி சீரியலில் குணச்சித்திர கேரக்டர்களில் நடிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ராம்ஜி : தனது அற்புதமான நடனத்தினாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பாலும் நம்மை கவர்ந்தவர் நடிகர் ராம்ஜி. இவர் நம்மவர், துள்ளித்திருந்த காலம், பெண்ணின் மனதை தொட்டு, பிரியமானவளே, உன்னை நினைத்து, குட்டி பிசாசு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களான மர்ம தேசம், காசளவு நேசம், வள்ளி, மகராசி ஆகியவற்றிலும் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு ராம்ஜி மற்றும் நடிகை தேவதர்ஷினி நடித்த ரமணி vs ரமணி 2 தொலைக்காட்சி தொடரில் இவரது நகைச்சுவை நடிப்பை யாராலும் மறக்க முடியாது. இந்த தொலைக்காட்சி தொடர் மக்களின் வரவேற்பு பெற்றதால் 51 எபிசோடுகளும் வேறு சில தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே தொடர் ரமணி Vs ரமணி 3.0 என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆகவும் வெளியாகி இவரது நடிப்பில் ரசிக்க வைத்தது.

Also Read : ஆள் அட்ரசே தெரியாமல் போன 5 வாரிசுகள்.. கமல் ரஜினியிடம் சிபாரிசு செய்தும் பிரயோஜனமே இல்லை

ஆனந்த் : 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ணக் கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆனந்த். பூந்தோட்ட காவல்காரன், அபூர்வ சகோதரர்கள், தலைவாசல், அதிசய மனிதன், அஞ்சலி, வானத்தைப்போல, ரெட், எனக்கு 20 உனக்கு 18, நினைவிருக்கும் வரை போன்ற பல திரைப்படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற எல்லா மொழிகளிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கின்றார். இயக்குனர் மணிரத்தினத்தின் திருடா திருடா படத்தில் இவர் செகண்ட் ஹீரோவாக பிரஷாந்த் உடன் நடித்த அசத்தியிருப்பார். அதன் பிறகு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் சிறு வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்னர் சீரியல் பக்கம் திரும்பிய இவர் சிகரம் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். பின்னர் ஒரு சில சீரியல்களில் நடித்ததுடன் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் நடித்த வருகிறார். கடைசியாக பாயும் ஒலி நீ எனக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.

வினித் : நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான நடிகர் வினித் சிறு வயதில் இருந்தே பரதநாட்டியத்தில் கைசேர்ந்தவர். 1992 இல் ஆவாரம் பூ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் வினித் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை பெற்றார். பின்னர் ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், காதல் தேசம், சக்தி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த புகழ் பெற்றார். அதன் பின் பிரியமான தோழி, காதல் கிறுக்கன், வேதம் போன்ற படங்களில் துணை நடிகராகவும் வலம் வந்தார். சந்திரமுகி படத்தில் நடித்த வினித் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரா ரா பாடலின் நடன அசைவுகளை பாராட்டாமல் இருக்க முடியாது. கேரளாவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இளைஞர் விழாவில் கலந்துகொண்டு நாட்டியமாடி விருதுகளை வென்றுள்ளார். மலையாளம் மொழியில் நூற்றுக்கும் மேல் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் இருந்துள்ளார் இவர். நடிகர் வினித் சமீப காலமாக தமிழில் நடிப்பது இல்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு காதல் என்பது பொதுவுடைமை படத்தில் நடித்துள்ளார்.

Also Read : அப்பா பெயரை கெடுத்த ஆனந்த்பாபு.. குடியால் குடி மூழ்கிய குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்