ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரே வருடத்தில் அதிக படங்கள் வெளியிட்ட 5 ஹீரோக்கள்.. உச்ச நடிகர்களை மிரள செய்த விஜயகாந்த், மோகன்

தற்போதுள்ள காலத்தில் வருஷத்திற்கு முன்னணி நடிகர்களின் ஒரு படம் ரிலீசாவதே பெரும் போராட்டமாக உள்ள நிலையில், 80 கால தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் பசி தூக்கமில்லாமல் 20க்கும் மேற்பட்ட படங்களில் ஒரே வருடத்தில் நடித்து சாதித்துள்ளனர். அப்படிப்பட்ட 5 நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போதுள்ள காலத்தில் வருடத்திற்கு ஒரு படம் ரிலீஸாவதே பெரும் விஷயமாக உள்ளது. ஆனால் 1978 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21 படங்களில் நடித்துள்ளார். மேலும் 1977 ஆம் ஆண்டில் 15 படங்களில் நடித்து கிட்டத்தட்ட 36 படங்களில் இரண்டே ஆண்டுகளில் நடித்துள்ளார். இதில் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களும் உள்ளடங்கும்.

Also Read: சம்பளத்திற்கு பதில் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்.. யாரும் செய்யாததை செய்து காட்டிய ரஜினி

கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில், இவரும் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் 1976 ஆம் ஆண்டு மட்டும் கிடடதட்ட 18 படங்களும், 1977 ஆம் ஆண்டு 19 படங்களும், 1978 ஆண்டு 19 படங்களும் நடித்துள்ளார். இதில் தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுடன் மொத்தம் 56 படங்களில் 3 வருடங்களில் நடித்து முடித்துள்ளார்.

விஜயகாந்த்: கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நல பாதிப்பால் ஓய்வெடுத்து வரும் நிலையில் 80, 90 களில் இவரது படங்கள் கொடிக்கட்டி பறந்தவை. அதிலும் முக்கியமாக 1984 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்தார். இந்த ஆண்டு மட்டும் வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள் உள்ளிட்ட படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது.

Also Read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

மைக் மோகன்: நேர்த்தியான கதைக்களத்துடனும், அப்பாவியான முகத்தோற்றத்துடனும் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நடிகர் தான் மைக் மோகன். இவரது கைகளில் மைக் பிடித்து இவர் பாடுவது போல் நடிக்கும் காட்சிக்காகவே ரசிகர்கள் அன்று திரையரங்கிற்கு படையெடுத்தார்கள். இதனிடையே 1984 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்துள்ளார். அதிலும் விதி, மூன்றாவது நாள், 24 மணி நேரம் உள்ளிட்ட படங்கள் சக்கைப் போடு போட்டது.

பிரபு: இளைய திலகம் பிரபு தற்போது வரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், 80 காலகட்டங்களில் இவரது நடிப்பில் வந்த படங்கள் சக்கைபோடு போட்டது எனலாம். அதிலும் முக்கியமாக 1988 ஆம் ஆண்டு மட்டும் 15 படங்களில் நடித்து ரிலீசானது. இதில் எழுதாத சட்டங்கள், வம்ச விளக்கு, இரு மேடைகள் உள்ளிட்ட படங்களில் பிரபுவின் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த படங்களாகும்.

Also Read: அட மைக் மோகன் இவ்வளவு ரெக்கார்டு வச்சிருக்கிறாரா.? காலை முதல் இரவு வரை தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள்

- Advertisement -

Trending News