செட் ஆகாத கேரக்டரில் நடித்து மூக்குடைந்த 5 ஹீரோக்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

ஹீரோக்கள் பொதுவாக தங்களுக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை ஏற்று நடிக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு சுத்தமும் செட் ஆகாத கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளனர். அவ்வாறு தனக்கு ஒத்து வராத கதாபாத்திரம் என தெரிந்தும் நடித்த 5 நடிகர்களை பார்க்கலாம்.

விஷால் : ஆக்சன் படங்கள் என்றால் பின்னி பெடலெடுக்க கூடியவர் நடிகர் விஷால். அதேபோல் கிராமத்து கதையம் கொண்ட படங்களிலும் நடித்த அசத்துவார். ஆனால் பிளேபாயாக தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். இது விஷாலின் திரை வாழ்க்கையில் மோசமான படமாக அமைந்தது.

Also Read :உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

சூர்யா : பொதுவாக சூர்யா கமர்ஷியல் படங்களில் பிச்சு உதறுவார். அதேபோல் போலீஸ் கதாபாத்திரங்களும் சூர்யாவுக்கு சூப்பராக செட் ஆகும். ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி ஜானலில் எடுக்கப்பட்ட மாஸ் என்ற மாசிலாமணி படத்தில் நடித்து சூர்யா சொதப்பி இருந்தார்.

கார்த்தி : பருத்திவீரன் படத்திலேயே தனது முத்திரையை பதித்தவர் நடிகர் கார்த்தி. சென்டிமென்ட், காதல், ஆக்சன் என அனைத்திலும் பட்டையை கிளப்ப கூடியவர். ஆனால் தனக்கு சுத்தமாக செட் ஆகாத அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து படுதோல்வி படத்தை கார்த்தி கொடுத்திருந்தார்.

Also Read :நறுக்குன்னு கேட்ட கேள்வி.. சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய பிரபலம்

விஜய் சேதுபதி : ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது குடுத்தாலும் கனகச்சிதமாக பொருந்தக்கூடியவர் விஜய் சேதுபதி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் பிளேபாய் கதாபாத்திரம் கொஞ்சம் அவருக்கு செட் ஆகவில்லை.

சந்தானம் : காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் குலுகுலு என்ற படத்தில் நடித்திருந்தார். எப்போதுமே காமெடியில் ரசிகர்களை கவர்ந்த சந்தானம் இந்த படத்தில் நேர்மாறாக நடித்திருந்தார். இதனால் சந்தானம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை குலுகுலு படம் பூர்த்தி செய்யவில்லை.

Also Read :ஃப்ளாப் ஆனாலும், அலப்பறை தாங்கல.. மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள சந்தானம் போட்ட பிளான்

Next Story

- Advertisement -