இமேஜ் பார்க்காமல், லேடி கெட்டப் போட்டு ஹிட்டான 5 படங்கள்.. ஷில்பாவை யாராலும் மிஞ்ச முடியாது

5 Tamil Heroes Put Lady Getup: பொதுவாக முன்னணி ஹீரோக்கள் தங்கள் இமேஜை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சில கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கு கிடைக்கும் கேரக்டர்களை சவாலாக ஏற்று நடிப்பார்கள். அப்படித்தான் இந்த ஐந்து ஹீரோக்கள் படம் முழுக்க லேடி கெட்ட போட்டு நடித்து அசத்தி இருக்கிறார்கள்.

பிரஷாந்த்: நடிகர் பிரஷாந்த் ஆணழகன் படத்தில் லேடி கெட்டப்பில் நடித்திருப்பார். பேச்சுலர்ஸ்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காத காரணத்தால் இவர் பெண் போல் நடித்து வாடகை வீட்டுக்கு செல்வதும், அங்கே வடிவேலு மற்றும் சின்னி ஜெயந்த் கூட்டணியில் நடக்கும் காமெடிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். அதிலும் இவர் அப்படியே பெண் போல் அழகாக இருப்பார்.

Also Read:பிரபல ஹீரோவின் படத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய் சேதுபதி.. இப்ப மேடை ஏற்றி அழகு பார்த்த சம்பவம்

கமல்: ஹாலிவுட்டில் வெளியான மிஸ்ஸஸ் டவுட் ஃபயர் படத்தில் தமிழாக்கம் தான் அவ்வை சண்முகி. இதில் கமல் பெண் கெட்டப்பில் அசத்தியதோடு, டப்பிங் பேசி, பெண் குரலில் பாடியும் இருப்பார். மணிவண்ணன் மற்றும் ஜெமினிகணேசன் இவரை காதலிப்பது போல் வரும் காட்சிகள் பயங்கர நகைச்சுவையாக இருக்கும்.

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் தைரியமாக நடித்த கேரக்டர் தான் ஷில்பா. திருநங்கைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்திருப்பார். திருமணம் ஆகி, ஒரு மகன் இருக்கும் நிலையில் திருநங்கையாக மாறிய பின் அந்த மகனுடன் இருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் கண்களை கலங்க வைத்திருக்கும்.

Also Read:விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன வர்மன்.. இயக்குனராக எடுக்கும் புது ஆதாரம்

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் காதல் இளவரசனாக கலக்கிய படம் தான் ரெமோ. கீர்த்தி சுரேஷ் காதலிக்கும் இவர் அந்த காதலுக்காக பெண் கெட்ட போட்டு அவர் பின்னால் சுற்றுவது போல் கதை அமைந்திருக்கும். ரெஜினா மோத்வானியாக நர்சு கெட்டப்பில் சிவகார்த்திகேயன் அசத்தியிருப்பார். அவருடைய கேரியரில் இது ரொம்பவும் முக்கியமான படம்.

விக்ரம்: நடிப்பில் எல்லாவிதமான பரிமாணங்களையும் முயற்சி செய்து பார்த்த விக்ரம் பெண் கதாபாத்திரத்தையும் விட்டு வைக்கவில்லை இருமுகன் படத்தில் லவ் எனும் கேரக்டரில் மிரட்டி இருப்பார் படம் முழுக்க இவர் பெண் கேரக்டரில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் கொடுக்கவில்லை.

Also Read:அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி

- Advertisement -