ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட்டோடு சுற்றும் 5 ஹீரோக்கள்.. உலோக நாயகனாக மாறிய உலக நாயகன்

சினிமாவில் டூப் போடாமல் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்க வேண்டும் என நினைத்த 5 நடிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி ஆபரேஷன் செய்து பிளேட் போடும் அளவுக்கு வந்திருக்கின்றனர். அதிலும் உலகநாயகன் கமலஹாசன் உடல் முழுவதும் உலோகத்துடனே சுற்றி வருகிறார்.

அஜித்: அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படும் அஜித் குமார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சண்டைக் காட்சிகளில் பின்னி பெடலெடுப்பார். கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித், தன்னுடைய படங்களில் அப்படி ஒரு காட்சி மட்டும் இருந்தால் அதை அல்வா சாப்பிடுவது போல் நடித்து முடிப்பார். இவருடைய
ஸ்பைனல் கார்டில் பல போல்ட் நட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.

அப்பாஸ்: 1996 இல் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சாக்லேட் பாய் தான் அப்பாஸ். இவர் 90களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, படையப்பா, மலபார் போலீஸ், திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த இவர் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூட்டில் இவருக்கு ஸ்டீல் பொருத்தப்பட்டுள்ளது.

Also Read: கமல் மீது காதல் வலையில் விழுந்த 6 நடிகைகள்.. திருமணத்தால் நொந்து போன ஆட்டுக்கார அலமேலு

கமல்: தனது 4 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு வெரைட்டி காட்ட வேண்டும் என்று வெறித்தனமாக நடிக்க கூடியவர். அதிலும் ஆளவந்தான் படத்தில் இருந்தே இவருக்கு பிரச்சனை தான். பல ஆபரேஷன்களை செய்து உடம்பு முழுக்க பல பிளேட்டுகள் பொருத்தப்பட்டு, இரும்பில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

அர்ஜுன்: ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுனின் படங்களில் பெரும்பாலும் சண்டை காட்சிகளும் சாகச காட்சிகளும் தான் நிரம்பி இருக்கும். அந்த காலத்தில் சண்டைக்காட்சிகளில் மிக ஆக்ரோஷமாக செயல்படும் அர்ஜுன், ஆக்சன் காட்சிகளில் வெறித்தனமாக நடித்ததால் கை எலும்பு முறிந்து அதற்கு பிளேட் வைத்திருக்கிறார்.

Also Read: அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

ஆர்யா: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா, விஷ்ணுவரதன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாக இருக்கக்கூடிய ஆர்யாவின் துருதுருவான நடிப்பினால் ஏகப்பட்ட ரசிகைகளின் கனவு கண்ணனாக இருக்கிறார். இவர் பட்டியல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் ஆக்சிடெண்டில் சிக்கி ஆபரேஷன் செய்து ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் உயிரைக் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் படப்பிடிப்பு தளத்தில் வெறித்தனமாக செயல்பட்டு, விபத்தில் சிக்கி ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட்டோடு சுற்றி வருகின்றனர்.

Also Read: 14 வயதில் அஜித்துக்கு ஜோடியான நடிகை.. பள்ளி மாணவியை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர்

Next Story

- Advertisement -