கமலுக்கு பெரிய தலைவலியா அமைந்த 5 படங்கள்.. சுப்ரீம் கோர்ட் போய் ஜெயித்து தட்டி தூக்கிய உலகநாயகன்

சினிமாவை வித்தியாசமாக பார்க்கக்கூடிய கமலஹாசன் எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தான் தேர்வு செய்து நடிப்பார். இதனாலேயே அவருடைய படங்கள் சில, சர்ச்சையில் சிக்கி ரிலீஸ் செய்ய முடியாமல் படாத பாடுபடும். அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான 5 படங்கள் உலக நாயகனுக்கு தலைவலியாக அமைந்ததுடன் அந்த படங்களை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் வரை ஏறி இறங்கி இருக்கிறார்.

மகளிர் மட்டும்: 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இதில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இருப்பினும் உலக நாயகன் கதை எழுதி, தயாரித்த இந்தப் படத்தில் பணி புரியும் இடத்தில் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் கொடுமைகளை ஒருதலைப் பட்சமாக காண்பித்திருப்பதால் சில சர்ச்சையில் சிக்கியது.

Also Read: கமலால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 7 வருடங்களுக்குப் பிறகு ஓகே சொன்ன உலகநாயகன்

அவ்வை சண்முகி: 1996 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் வயதான பெண்ணைப் போல வேடமிட்டு வெளியான காமெடி திரைப்படம் ஆகும். இதில் கமலஹாசன் உடன் மீனா நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாண்டியன் மற்றும் அவ்வை சண்முகி கதாபாத்திரத்தில் ஜெமினிகணேசனின் மனம் கவர்ந்த காதலியாகவும் படத்தில் தனது கலக்கல் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் ஜாதி ரீதியாக ஒரு சில கருத்துக்கள் கூறியதால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது

விஸ்வரூபம்: 2013 ஆம் ஆண்டு கமலஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்த இந்தப் படத்தில் விஸ்வநாத் என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு கதக்களி நிபுணராக நடித்திருப்பார். தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் இவர் எப்படி தப்பி செல்கிறார் என்பதை மையமாக வைத்து விறுவிறுப்புடன் கதைகளமானது அமைந்துள்ளது.

இதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் ஆக சித்தரித்து இருப்பதாக கூறி படத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் தடை விதித்தனர். தடைகள் எல்லாம் தகர்த்து எறிந்து அதனை சாதனைகளாக மாற்றி காட்டியுள்ளார். விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தின் வெற்றினை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: கமலையே வியக்க வைத்த 5 நடிகர்கள்.. பகத் பாசிலை தூக்கி வைத்துக் கொண்டாடும் உலகநாயகன்

தசாவதாரம்: 2008 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் பத்துக்கு மேற்பட்ட வேடங்களில் ஏற்று நடித்துள்ளார். படத்தில் கமலுக்கு ஜோடியாக அசினும் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் சுனாமியோடு தொடர்பு படுத்தியும் உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்த கிருமி எவ்வாறு அழிவை ஏற்படுத்துகிறது என்பதனை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது.

இதில் சைவ வைணவத்தை பற்றி விவரித்துக் கூறியதால் இந்துக்கள் இடையே சில விவாதங்கள் ஏற்பட்டு படத்தை வெளியிடுவதில் சிக்கலானது. அதன் பிறகு ஒரு வழியாக ரிலீஸ் செய்த படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

விருமாண்டி: 2004 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படமாகும். இதில் கமலஹாசன் உடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் கமலஹாசன் விருமாண்டி என்னும் கதாபாத்திரத்திலும் பசுபதி கொத்தால தேவன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் இவர்களுக்கிடையே நடக்கும் கொலை, வன்முறை போன்றவற்றை காண்பித்து பார்க்கும் ரசிகர்களுக்கும் வன்முறை எண்ணத்தை தூண்டிவிடும் என்று படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பிறகு ஒரு வழியாய் படத்தை ரிலீஸ் செய்து சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: தமிழ்நாட்டை கண்ட்ரோல் செய்ய பிளான் போடும் பெரிய தலைகள்.. தரமான கூட்டணியுடன் எதிர்க்க தயாரான கமல்

இவ்வாறு இந்த 5 படங்களும் உலக நாயகனுக்கு பெரிய தலைவலியாக அமைந்த படங்களாக அமைந்துள்ளது. அதிலும் விஸ்வரூபம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னரும் முதல் பாகத்தை தொடர்ந்து விஸ்வரூபம் 2வும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.