ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இளசுகளை கெடுத்து, மனதில் நஞ்சை பதிய வைத்த 5 படங்கள்.. பேரை கெடுத்துக் கொண்ட ஓவியா

Spoil Movies: சினிமாவைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதே மாதிரி பல கெட்ட விஷயங்களையும் அப்பட்டமாக படத்தின் மூலம் காட்டி வருகிறார்கள். அதிலும் இளசுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அளவிற்கு அவர்களை கெடுக்கும் விதமாக சில படங்கள் வந்திருக்கிறது. அந்த படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

இருட்டு அறையில் முரட்டு குத்து: சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக், விஜே ஷரா, வைபவி சாண்டில்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படமாக வெளிவந்தது. அதில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு ரொம்பவே டபிள் மீனிங் காக இருக்கும். முக்கியமாக இப்படத்தை பார்த்து இளசுகுகள் குட்டிச்சுவராக போவதற்கான அனைத்துமே அடங்கி இருக்கும்.

Also read: நீ பற்ற வைத்த நெருப்பொன்று, நேரம் பார்த்து விக்ரமனை அசிங்கப்படுத்தும் அசீம்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

90 எம் எல்: அனிதா உதீப் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு 90 எம்எல் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஓவியா, சிம்பு, திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடித்திருக்கும் பெண்களைப் பார்த்தால் காரி துப்பும் அளவிற்கு தான் இருக்கும். அதிலும் இதில் வரும் காட்சிகள் வசனங்கள் எல்லாம் கேடு கேட்டுப் போய் இருக்கும். பிக் பாஸ் போயி பல ரசிகர்களின் மனதை கவர்ந்த ஓவியா இந்த படத்தின் மூலம் அனைத்தையும் கெடுத்து விட்டார்.

அநாகரிகம்: கிருஷ்ண தேவன் இயக்கத்தில் வகிதா, பாபிலோனா நடிப்பில் வெளியான இப்படம் பார்ப்பவர்களை கண் கூசும் அளவிற்கு மிகவும் மோசமான காட்சிகளுடன் கேடுகெட்ட படமாக வெளிவந்திருக்கும்.

Also read: ரஜினியை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை.. வடிவேலு காமெடியை வைத்து பண்ணும் அலப்பறை

உயிர்: சாமி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு உயிர் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அண்ணியாக இருக்கும் சங்கீதா, ஸ்ரீகாந்தை அடையத் துடிக்கும் கேரக்டரில் செய்யும் அசிங்கமான வேலையை படமாக காட்டப்பட்டிருக்கும்.

பா பா பிளாக் ஷீப்: இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் கடந்த வாரம் பாபா பிளாக் ஷீப் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் இயக்குனர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமானவர். இதில் அம்மு அபிராமி, ஆர் ஜே விக்னேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பள்ளி மாணவர்கள் செய்யும் விஷயங்களை காட்டுகிற பெயரில் பல தேவையில்லாத விஷயங்களை முழுக்க முழுக்க காட்டி இருப்பார்கள். படிக்கிற பசங்கள் மனதில் தேவையில்லாம நஞ்சை விதைக்கிற மாதிரி விஷயங்கள் இருக்கும்.

Also read:  பண மோசடியில் சிக்கிய அசுரன் பட அம்மு அபிராமி.. இப்படி எல்லாமா பிராடு பண்ணுவாங்க!

- Advertisement -

Trending News