தியேட்டரில் ரிலீஸ் செஞ்சிருக்கலாம் என ஏங்க வைத்த 5 படங்கள்.. ஓடிடிலையே பெத்த லாபம் பார்த்த சார்பட்டா

சினிமாவை பொறுத்த வரையிலும் நடிகர்கள் தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அப்படி ஆக இவர்கள் நடிக்கும் படங்களை பற்றி தகவல்களும், எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவிலேயே இருந்தும் வருகிறது. அதிலும் ரசிகர்கள் தங்களின் ஃபேவரட் ஹீரோக்களை திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியிடாமல் பட குழு ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட்டு பெத்த லாபத்தையும் பார்த்து வந்தனர். அப்படியே ஆக இந்த படங்களை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்திருக்கலாம் என ரசிகர்களையே ஏங்க வைத்த 5 படங்களை இங்கு காணலாம்.

ஜெய் பீம்: ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஜெய் பீம். அதிலும் இருளர் இனத்தைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். மேலும் இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  

Also Read: சூர்யாவின் 2 ஆஸ்தான இயக்குனர்களை தட்டி தூக்கிய அருண் விஜய்.. இது பழிக்கு பழியா இல்ல பாவமா.?

டானாகாரன்: 2022 ஆம் ஆண்டு தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடிப்பில் உருவான திரைப்படம் டானாகாரன். காவலர் பயிற்சி கல்லூரியில் நடக்கும் அதிகார அத்துமீறல்களை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற மாபெரும் வெற்றி பெற்றது.

கடாவர்: 2022 ஆம் ஆண்டு அனூப் பணிக்கர் இயக்கத்தில் வெளியான திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் டிஸ்னி ப்ளட்ஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கலாம் என்று ஏங்க வைத்த  படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

Also Read: சொந்த மாநிலத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட அமலாபால்.. துரத்தியடிக்கப்பட்ட அவலம்

லிஃப்ட்: 2021 ஆம் ஆண்டு வி வினித் வரபிரசாந்த் இயக்கத்தின் வெளிவந்த திரில்லர் படமாகும். இதில் கவின், அமிர்தா ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கில் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று நடிகர்களின் பாராட்டையும் பெற்றது.

சார்பட்டா பரம்பரை: 2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் ஆர்யா, பசுபதி, அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் ஆர்யா வித்யாசமான தோற்றத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கலாம் என ரசிகர்களையே ஏங்க வைத்த படமாக அமைந்தது.

Also Read: மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

Next Story

- Advertisement -