அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

Actor Arjun: அர்ஜுன் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது தேசப்பற்று மிகுந்த ஒரு நடிகர் என்பது தான். அதையும் தாண்டி ஒரு சில படங்கள் வெற்றிகரமாக நடித்து இவருடைய சினிமா கேரியரை தூக்கி விட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்தும் இவருடைய மாஸ் குறையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட இவருடைய படங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஜென்டில்மேன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், மதுபாலா, சுபஸ்ரீ, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அர்ஜுனுடைய கேரக்டர், பணக்காரர்களிடமிருந்து பணத்தை திருடி ஏழைகளாக இருக்கும் மாணவர்களின் கல்விக்காக உதவி செய்யக்கூடியவராக நடித்திருப்பார். இப்படத்தில் இருந்து இவருடைய மதிப்பு ரசிகர்களிடம் கூடிவிட்டது என்றே சொல்லலாம். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. அத்துடன் அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றுக் கொடுத்தது.

Also read: பொட்டி பாம்பாய் அடங்கி கிடக்கும் அர்ஜுன்.. பெரிய இடத்தில் இருந்து வந்த அழைப்புக்கு போடும் பிள்ளையார் சுழி

ஜெய்ஹிந்த்: இப்படம் அர்ஜுன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ஜெய்ஹிந்த் திரைப்படமாக வெளிவந்தது. இதில் அர்ஜுன், ரஞ்சிதா, கவுண்டமணி, மனோரமா, செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அர்ஜுன், சில கைதிகளை இவருடன் அழைத்துக் கொண்டு ஒரு பயங்கரவாத குழுவை பிடிப்பதற்கு தீவுக்கு செல்லும் விதமாக கதை அமைந்திருக்கும். இதற்கிடையில் கவுண்டமணி எப்போதெல்லாம் கண்மூடி தூங்க ஆரம்பிக்கிறாரோ அப்பொழுது இவருடைய கனவில் செந்தில் வந்து இடையூறு பண்ணுமாறு சில நகைச்சுவைகள் அமைந்திருக்கும். அத்துடன் இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

முதல்வன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு முதல்வன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கதை சற்று வித்தியாசமாகவும் அனைவரும் கை தட்டி ரசிக்கும்படியான காட்சிகள் அதிகமாக அமைந்திருக்கும். அதாவது ரகுவரனிடம், அர்ஜுன் கேள்வி கேட்கும் பொழுது அதில் ஒரு நாள் முதல்வராக இருந்து பாருங்கள் எல்லாம் உங்களுக்கு புரியும் என்று சொல்கிறார். அதை சவாலாக எடுத்து அர்ஜுனும் ஒரு நாள் முதல்வராக இருந்து அவருடைய வேலைகளை சரிவர செய்து காட்டி முடிப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இவருக்கு அமைந்தது.

Also read: ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் அர்ஜுன்.. லியோ படத்தில் மொத்தமாக மாறிய சம்பவம்

ஏழுமலை: அர்ஜுன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஏழுமலை திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், சிம்ரன், மும்தாஜ், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது பக்கத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட பகையை வைத்து அமைந்திருக்கும். இதில் ஒரு பகுதியில் ரொம்பவே கோபக்காரராகவும், அண்ணன்கள் மீது பாசம் வைத்திருக்கக் கூடியவராகவும் நடித்திருப்பார். அதன் பின் மனைவி இழப்பிற்கு அடுத்து சாந்தமாக இருந்து அவருடைய குழந்தையை வளர்க்கும் பொழுது இவருக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிக்கும் விதமாக கதை நகரும். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கொடுத்தது.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும். இதில் அர்ஜுன், ஏசிபி ஆக இருந்தாலும் கடைசியில் இந்த பணத்திற்காக பின்னணியில் இருந்து சதி வேலை செய்யக்கூடியவராக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் படம் பார்க்கும் பொழுது அஜித்துக்கு வில்லன் போல் கேரக்டர் சூட்டப்பட்டிருக்கும்.

Also read: மங்காத்தா போல் லியோ-வில் சொல்லி அடிக்கப் போகும் அர்ஜுன்.. பாட்ஷா பட சாயலில் வெளிவந்த கதை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்