பொட்டி பாம்பாய் அடங்கி கிடக்கும் அர்ஜுன்.. பெரிய இடத்தில் இருந்து வந்த அழைப்புக்கு போடும் பிள்ளையார் சுழி

அர்ஜுன் தமிழ் சினிமாவில் 90ல் ஆக்ஷன் கிங் ஆக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படிப்பட்ட இவர் தற்போது நடித்துவரும் அனைத்து கதாபாத்திரங்களையும் பின்னி பெடல் எடுக்கும் விதமாக அடைமொழிக்கு ஏற்ப ஆக்ஷனில் இருந்து வில்லனாக படை எடுத்து விட்டார். அதற்காக அவர் பிள்ளையார் சொல்லி போட்ட படமே மங்காத்தா தான்.

பிறகு அஜித்துடன் வில்லனாக நடித்து விட்டாச்சு. அதன் பின் வேறு யார் கூட நடிப்பார்கள் விஜய்க்கு தான். தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனாலையே இவருடைய ஆட்டிட்யூட் கொஞ்சம் ஓவராக தான் ஆகிவிட்டது. மேலும் ஆக்ஷன் கிங் என்ற பெயருக்கு ஏற்ப அதிரடியாக தான் இவர் செயலும் இருக்கிறது.

Also read: விஜய்க்கு ஓகே சொன்ன கதையில ஹிட் கொடுத்த லியோ பட வில்லன்.. மொத்தத்தையும் போட்டுடைத்த இயக்குனர்

பொதுவாகவே இவருடைய சூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும் இது வேண்டும் என ஓவராக கெத்துடன் இருக்கக்கூடியவர். ஆனால் அப்படி இருந்தவர் லியோ பட படிப்பின் போது ரொம்பவே பொட்டி பாம்பாய் அடங்கி விட்டார். அதற்கு காரணம் இவருக்கு தொடர்ந்து வரும் வாய்ப்புகள் அனைத்தும் வில்லன் கேரக்டராகவே இருப்பதால் தான்.

இதில் இவருக்கு அதிகமான பாராட்டுக்களும் வரவேற்பு கிடைத்தாலும் இவருக்கு என்னமோ அதிக அளவில் நாட்டமில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் இந்த வாய்ப்பையும் விட வேண்டாம் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தி நடித்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி தற்போது இவருக்கு தேடி வந்த வாய்ப்பு வில்லன் வாய்ப்பு தான்.

Also read: கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

லியோ படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் வில்லனாக அர்ஜுனுக்கு பெரிய தொகையை கொடுத்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த கேரக்டருக்கு நடிகர் விக்ரமே கேட்டிருந்தார்கள். அவர் ரொம்பவே யோசித்ததால் 50 கோடி தருகிறோம் என்று கூப்பிட்டும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய இமேஜை கருத்தில் கொண்டு திட்டவட்டமாக முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதனால் தற்போது அவருக்கு பதிலாக ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் இதற்கு என்ன பதில் என்று சொல்லத் தெரியாமல் லியோ படப்பிடிப்பு இடத்தில் வாலை சுருட்டிக் கொண்டு கப் சிப் என்று வேலையை மட்டும் பார்த்து வருகிறார். ஆனாலும் பெரிய இடம் மற்றும் அதிகமான சம்பளம் என்பதால் ரஜினி படத்தில் வில்லன் கேரக்டருக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

- Advertisement -