புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எதிர்பார்ப்பு இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. மனைவியிடம் குத்து சண்டை போட்ட விஷ்ணு

பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி காண்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு இருக்கையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் குறுகிய காலகட்டத்தில் சிறந்த கதையை கொண்டு இயக்குவது சிறிய ப்ராஜெக்ட் படங்கள் தான்.

இந்த வகை படங்கள் மக்களின் எதிர்பார்ப்பிற்கு வரவில்லை என்றாலும் கதை நன்றாக அமைந்து வெற்றி காண்கிறது. அவ்வாறு புது புது இயக்குனர்கள் இத்தகைய படங்களை எடுக்க முயற்சிக்கின்றனர். இது போன்று சிறு பட்ஜெட்டில் வந்து வெற்றி கண்ட 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: மகனைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த அட்லீ பட நடிகர்.. ரிலீஸ் நேரத்துல ஏண்டா இப்படி சாவடிக்கிறீங்க!

லவ் டுடே: கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து வெளிவந்த படம் தான் லவ் டுடே. இப்படம் இக்காலகட்டத்தில் ஏற்படும் காதல், மோதல்களை வெளிப்படுத்தி இருக்கும். மேலும் நம் இஷ்டத்திற்கு எடுக்க கூடிய முடிவுகளால் கஷ்டத்திற்கு ஆளாகுவதை உணர்த்தும் விதமாக கதை அமைந்திருக்கும். ஆனால் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று 150 கோடி வசூலை அடைந்தது.

கட்டா குஸ்தி: 2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கட்டா குஸ்தி. இப்படத்தில் விஷ்ணு, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் பொய் கூறி திருமணம் செய்து கொள்ளும் ஹீரோயின் தன் விருப்பப்படி குத்து சண்டை போடுகிறார். முதலில் அதை வெறுத்த ஹீரோ இறுதியில் ஏற்றுக் கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்று 30 கோடி வசூலை பெற்று தந்தது. குறைந்த பட்ஜெட்டில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது.

Also Read: தயாரிப்பாளராக கெத்து காட்டும் கமல்.. 500 கோடி பட்ஜெட், 3 ஹீரோக்களால் அரண்டு போன லைக்கா

டாடா: அண்மையில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணாதாஸ், பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் கல்லூரி பருவத்தில் ஏற்படும் காதல் விளைவால் சிக்கிக் கொள்ளும் ஹீரோ, ஹீரோயின் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தை கதையாக அமைக்கப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தில் தந்தையின் பாசத்தை உணர்த்தும் நடிப்பில் கவின் நடித்து நல்ல விமர்சனத்தை பெற்று 20.9 கோடி வசூலை அள்ளியது.

அயோத்தி: இப்படம் ஆர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் மத வேறுபாடு பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படத்தின் கருத்து மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. ஆனால் இப்படம் தியேட்டரில் சிறிது நாட்களே ஓடியது அதன் பின் ஜி 5ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அருள்மொழி வருமனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதுவரை இல்லாத அளவிற்கு 5 பெரிய பட்ஜெட் படங்கள்

குட் நைட்: அண்மையில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன்,மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பார்கள். மேலும் குறட்டை தீராத பிரச்சனையால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும் விதமாக மணிகண்டன் அசத்திருப்பார். காமெடி கலந்த படமாக இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இத்தகைய சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்க்காத வசூலையும் அள்ளிச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News