நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

நவரச நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலித்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக படாத பாடுபடுகிறார். இதற்காக நல்ல கதை அமைந்தாலும் தொடர் 5 படங்களில் தோல்வியை சந்தித்து அவருடைய அப்பா அளவிற்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கடல்: கௌதம் கார்த்திக், துளசி ஆகியோரின் முதல் படமான கடல் படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். சாத்தானுக்கும், தேவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கடல் படம். ரோஜா, தளபதி, நாயகன் போன்ற படங்களை இயக்கிய மணிரத்னம் இடமிருந்து கடல் போன்ற படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு அப்படியே அப்பட்டமான தெரிந்தது.

Also Read: விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்.. இந்த படமாச்சு ஹிட் ஆகணும் ஆத்தா!

ரங்கூன்: 2007 ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஏ. ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் அதிரடி காதல் நாயகனாக தமிழ் ரசிகர்களிடம் என்ட்ரி கொடுத்தார். இருப்பினும் இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

வை ராஜா வை: 2015 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்ஸி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படம் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: விட்ட இடத்தை பிடிக்க போராடும் கௌதம் கார்த்திக்.. வரிசை கட்டி நிற்கும் நான்கு படங்கள்!

மிஸ்டர். சந்திரமௌலி: நவரச நாயகன் கார்த்திக் நடித்த மௌன ராகம் திரைப்படத்தின் கதாபாத்திரமான சந்திரமௌலி என்ற பெயரை வைத்து ஹிட் கொடுக்கும் எண்ணத்தில் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் கார்த்திக்கும் இணைந்து நடித்திருந்தார். இவர்களுடன் ரெஜினா கசான்டிரா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது.

தேவராட்டம்: 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சூரி, மஞ்சுமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் கௌதம் கார்த்திக்கிற்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடி கதை களத்தை கொண்ட இந்தப் படத்தின் மூலம் அவருக்கு எதிர்பார்த்த மார்க்கெட் கிடைக்காமல் போனது.

Also Read: பிரபல நடிகரை இன்ஸ்டாகிராமில் புகழ்ந்து பதிவிட்ட கௌதம் கார்த்திக்.. சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

இவ்வாறு நல்ல கதை அமைந்தும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஓடாத இந்த 5 படங்கள் அவருக்கு படு தோல்வியாக அமைந்தது. மேலும் சில வெற்றி படங்களை கொடுத்தாலும் கௌதம் கார்த்திக் அவருடைய அப்பா அளவுக்கு தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News