வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெரிய தூண்டிலை வீசும் உதயநிதி.. சமீபத்தில் கையிலெடுத்த ஒரே மாதிரியான 5 படங்கள்

ஆரம்பத்தில் உதயநிதி சந்தானத்துடன் இணைந்து காமெடி படங்களை கையில் எடுத்த கலக்கி வந்தார். ஆனால் தற்போதெல்லாம் உதயநிதி படத்தின் டைட்டிலை பார்த்தாலே ஏதோ பெரிய தூண்டிலை போடுவது போல் தெரிகிறது. அரசியல்வாதியாக கலக்கி வரும் உதயநிதி மக்களுக்கு நல்ல கருத்தை சொல்வதற்காக இவ்வாறு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு சமீபத்தில் உதயநிதி நடிப்பில் உருவான 5 படங்களை பார்க்கலாம்.

நெஞ்சுக்கு நீதி : பாலிவுட்டில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தனியா, ஷிவானி ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தனர். ஜாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றால் ஒரு குடிமகனுக்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதை உணர்த்தும் படமாக இப்படம் அமைந்தது.

மாமன்னன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். மேலும் மாமன்னன் படம் அரசியல் பரபரப்பூட்டும் படமாக அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கழகத் தலைவன் : மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கழகத் தலைவன். இப்படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படமும் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்பது டைட்டிலை பார்த்தே தெரிகிறது.

செங்கோல் : கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருக்கும் படம் செங்கோல். இப்படத்தை கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க உள்ளார். இப்படம் ஒரு அரச வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணை நம்பாதே : மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் கண்ணை நம்பாதே. இப்படம் கிரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News