வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இரட்டை கதாநாயகர்களாக அஜித் நடித்த 5 படங்கள்.. ஆக்சன் கிங்க்கு இணையாய் நின்ற அஜித்

படத்தில் மக்களின் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இரட்டை ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்று சொன்னால் போதும் அதன் ஆவல் இன்னும் அதிகமாக மாறிவிடுகிறது. அந்த அளவிற்கு யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற கேள்வியும் எழ ஆரம்பித்து விடுகிறது.

மேலும் தமிழ் சினிமாவில் இரட்டை கதாநாயகர்கள் இடம்பெற்ற படங்கள் நிறைய உள்ளன. அவ்வாறு இரு ஹீரோக்களில் அஜித் நடித்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஹைதராபாத்தை விட்டு விரட்டப்பட்ட திரிஷா.. லிவிங் ரிலேஷன்ஷிப்பால் பயந்து போன திரையுலகம்

ராஜாவின் பார்வையிலே: 1995ல் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் இந்திரஜா, விஜய், அஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் நண்பனான அஜித் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வார். அந்த துயரத்தில் இருந்து மீளாத விஜய் தன் காதலை வெறுப்பது போன்று கதை அமைந்திருக்கும். இருப்பினும் இப்படம் பெரிதளவு ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உல்லாசம்: 1997ல் ஜே. டி & ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் உல்லாசம். இப்படத்தில் அஜித்குமார், விக்ரம், மகேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் முக்கோண காதல் அமைப்பில் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். இருப்பினும் இப்படம் தோல்வியை தழுவியது. மேலும் அஜித்தின் பெயிலியர் படங்களை இதுவும் ஒன்று.

Also Read: அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த 5 படங்கள்.. விஜய்க்குப்பின் ஒர்க் அவுட்டான செம கெமிஸ்ட்ரி

கல்லூரி வாசல்: 1996ல் பவித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கல்லூரி வாசல். இப்படத்தில் பிரசாந்த், அஜித், தேவயானி, பூஜா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் தவறான புரிதலால் ஏற்படும் மனக்கசப்பை உணர்த்தும் விதமாக கதை அமைந்திருக்கும். இருப்பினும் இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியை தழுவியது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்: 1998ல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கார்த்திக், ரோஜா, அஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் ரோஜாவை விரும்பும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் ஹீரோயின் தன்னை விரும்பும் கார்த்திக்கை காதலிப்பது போன்று கதை அமைந்திருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: திரிஷாவின் முதல் வெற்றி படம்.. இல்லாத ஒரு விஷயத்துக்காக அடித்து கொள்ளும் நம்பர் நாயகிகள்

மங்காத்தா: 2011ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மங்காத்தா. இப்படத்தில் அர்ஜுன், அஜித், திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் அஜித்தின் 50 ஆவது படமாகும். இதில் ஐ பி எஸ் ஆபீஸராக ஸ்மக்லிங் கேங்கை கண்டுபிடிக்கும் பயணத்தில் விநாயக்காக அஜித் மேற்கொள்கின்றார். மேலும் மறைமுகமாக அர்ஜுனும் பெரிய ஆபீஸராக இதே நோக்கத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் அஜித், ஆக்ஷன் கிங்குக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் இடம் பெற்றிருப்பார். அவை ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.

- Advertisement -

Trending News