ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தியேட்டரில் பிளாப் ஆகி டிவியில் ஹிட்டான 5 படங்கள்.. இந்த மாதரி படம் இப்படி பார்ப்பதற்கு தான் லாயக்கு

சினிமாவை பொறுத்த வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வி படமாகவே  அமைந்துவிடுகிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை சந்தித்து பின்னாளில் டிவியில் ஹிட்டான 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

பாபா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பாபா. இதில் ரஜினிகாந்த் உடன் கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, சுஜாதா, நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் வசூல் ரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்தும்கூட வரவேற்பை பெறாமல் போனது. ஆனால் இப்படத்தை ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் பொழுதும் டிஆர்பி ரேட்டிங் டாப்பில் உள்ளது என்றே சொல்லலாம்.

Also Read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

குணா: சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் குணா. இதில் கமல் உடன் ரேகா, ரோஷினி, ஜனகராஜ்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் கமல் நடிப்பில் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த படங்களில் குணாவும் ஒன்று. அதனைத் தொடர்ந்து நல்ல கதை அம்சமும், கமலின் நடிப்பு  திறமை இருந்தும் கூட இப்படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அன்பே சிவம்: சுந்தர்.சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் உருவான திரைப்படம் அன்பே சிவம். இதில் கமல்ஹாசன் உடன் மாதவன், கிரண், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் கமல் திரைப்படம் என்றால் சண்டைக் காட்சிகள், சாகசம் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது  நிலவி வந்தது. ஆனால் அதற்கு எதிர் மாறாக அன்பே சிவம் படத்தில் மிக சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே இப்படம் தோல்வியை சந்தித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பொழுதும் அன்பே சிவம் திரைப்படம் மாஸ் ஹிட் அடிக்கிறது.

Also Read: தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

சுள்ளான்: ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் சுள்ளான். இதில் தனுஷ் உடன் சிந்து துலானி, மணிவண்ணன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சுள்ளான் திரைப்படம் நல்ல கதை அம்சம், சண்டைக் காட்சிகள் என பார்ப்பதற்கு நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை.

கிரி: சுந்தர் சி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் கிரி. இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் ஆக்சன் கிங் அர்ஜுன், ரீமாசென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல டைரக்ஷன், நல்ல கதைய அம்சம் என அனைத்தும் பக்காவாக பொருந்தி இருந்தது. ஆனால் தொலைக்காட்சியில் கிடைத்த வரவேற்பு திரையில் கிடைக்கவில்லை.

Also Read: ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. கரும்பு மிஷினில் மாட்டிய கதையான நடிகரின் நிலை

- Advertisement -

Trending News