ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

தமிழ் சினிமாவில் டாப்  ஹீரோக்களாக இருக்கக்கூடிய நடிகர்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்து வருகிறது. அப்படியாக திரையில் அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதிலும் இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள அகநக பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மீண்டும் எகிற செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Also Read: மறுபிறவி எடுத்து வரும் அருண்மொழி வர்மன், திருப்பி அடிக்கும் சோழ சாம்ராஜ்யம்.. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. மேலும் இப்படம் பக்கா மாஸ் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் லியோ படமானது படக்குழு திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி  திரைப்படம் வெளியாக உள்ளது.

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இதில் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதிலும் தனது படங்களில் எப்பொழுதும் வித்தியாசம் காட்டக்கூடிய விக்ரம் தங்கலான் படத்தில் ஆதிவாசி போல் ரொம்பவே வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: வில்லன் நடிகரால் தலை வலியில் லோகேஷ்.. லியோ படப்பிடிப்பில் நடக்கும் குளறுபடி

கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ் உடன் நடிகை பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து படத்தின் கதையானது அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஓரளவு முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி இப்படத்திற்கான அப்டேட் வெளிவர உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரையில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் கமலஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 80 சதவிகித படப்பிடிப்பானது நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் விக்ரம் திரைப்படத்தை விட ஒரு படி மேல் வசூல் வேட்டை நடத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் கமலஹாசன்.

Also Read: தனுஷ் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி.. பல கலவரங்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ்

- Advertisement -

Trending News