சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்

Actor Sivakarthikeyan Friends: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஏலியன்ஸ் கதையை மையமாக வைத்து வரப் போகிற அயலான் படம். இப்படி பல படங்களில் கமிட்டாகி வெற்றி நாயகனாக வந்து கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவருக்கு நெருங்கிய நண்பர்களாக சினிமாவில் 5 இயக்குனர்கள் எப்பொழுதும் இவருடன் ஒட்டிக் கொண்டே வருகிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அறிமுகமான முதல் படமே சிவகார்த்திகேயனை வைத்து தான்.

Also read: கணவன் இறப்பு, நடுத்தெருவுக்கு வந்த காமெடி நடிகரின் குடும்பம்.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன், சூரி

இவர் இயக்குனர் அட்லீயுடன் உதவி இயக்குனராக முதலில் பணிபுரிந்தார். ஆனால் அப்போதே இவருடைய ஒரு சில ஆட்டிட்யூட் ரஜினிக்கு பிடிக்காமல் போய் விட்டது. அடுத்ததாக தற்போது வெற்றி இயக்குனராக ஜொலித்து வரும் நெல்சன். சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பராகவும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் அந்த இடமே ஜாலியாக இருக்கும் என்பது போல் லூட்டி அடித்து கொள்வார்கள். இவர்களுடைய காம்பினேஷன் வந்தாலே அது வெற்றி தான் என்பதற்கு ஏற்ப புரிதல் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது.

அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனும் இவரும் எப்பொழுதும் ஒட்டிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள். அந்த வகையில் இயக்குனராக அவதரித்து சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படங்களாக மூன்று படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் இயக்குனர் பொன்ராமுக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன்.

Also read: நிராசையாக போன சிவகார்த்திகேயன், தனுஷ் ஆசை.. என்னதான் முட்டி மோதினாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் என்னதான் இயக்குனராக அறிமுகமாகி பல படங்களை எடுத்தாலும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்த பிறகு இவருக்கு ஏறுமுகமாக தான் வெற்றி தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனை வைத்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றி படங்களை கொடுத்து நட்பு ரீதியாகவும் இருவரும் இணைந்து விட்டார்கள்.

அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி போன்ற படங்களை கொடுத்து வந்தவர். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் துவண்டு போயிட்டார். அப்பொழுது சிவகார்த்திகேயன் மூலமாக மறுபடியும் தன்னை நிரூபித்துக் கொண்ட படம் தான் மனம் கொத்தி பறவை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் எழில் நட்பு ரொம்ப ஸ்ட்ராங்காக மாறிவிட்டது.

Also read: தட்டு தடுமாறி 100 கோடி வசூலை தொட முடியாத மாவீரன் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிப்போர்ட்

- Advertisement -spot_img

Trending News