இளசுகளை கவுக்க களமிறங்கிய ஐந்து க்யூட்டான நடிகைகள்.. மமீதா மாதிரி பொண்ணு வேணும்னு திரியும் சிங்கிள்ஸ்

5 cute actresses: ஒரு படத்தில் ஹீரோ வில்லன் என்று என்னதான் மோதிக் கொண்டு படத்தை சூடு பிடிக்க வைத்தாலும் அவ்வப்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக ஹீரோயின்கள் வந்து என்டரி கொடுத்தால் தான் அந்த படம் பார்த்த முழு திருப்தியை கொடுக்கும். அந்த வகையில் இப்ப இருக்கிற இளசுகளை கவுக்கும் விதமாக க்யூட்டான இளம் நடிகைகள் நிறைய பேர் களமிறங்கி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும் எந்த படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

ப்ரீத்தி முகுந்தன்: ஸ்டார் படத்தில் கவினுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் வந்து கலக்கிய ப்ரீத்தி மிகுந்தன் ஹீரோயின் ஆக நுழைந்திருக்கிறார். நடித்த முதல் படத்திற்கு பின் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார். அதாவது முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, மோகன்லால், பிரபாஸ் ஆகிய கூட்டணியில் தெலுங்கில் சரித்திர படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்ற படத்தில் ப்ரீத்தி மிகுந்தன் இணைந்திருக்கிறார். இதில் ப்ரீத்தி முகுந்தன் சண்டை போடும் காட்சியில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளசுகளை சுற்ற வைக்கும் மமீதா

கௌரி ஜி. கிஷன்: மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் 96 படத்தில் ஜானு என்ற கேரக்டர் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஹாட் ஸ்பாட் என்ற படத்தில் நடித்து இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மாளவிகா மனோஜ்: தமிழில் ஜோ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மனோஜ் ரியோக்கு ஜோடியாக சுசித்ரா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதிலிருந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மறுபடியும் ரியோவுக்கு ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படத்தின் பட பூஜை முடிந்த நிலையில் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

மமீதா பைஜூ: மலையாளத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் ஹீரோயினாக அறிமுகமான மமிதா சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல படங்களின் மூலம் போராடி வந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த பிரேமலு படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். தற்போது இவரை மாதிரி தான் எங்களுக்கு பொண்ணு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு சிங்கிளாக இருக்கும் பசங்களை சுற்ற வைத்து விட்டார்.

மீனாட்சி சவுத்ரி: மாடல் மற்றும் அழகுப் போட்டியில் பட்டத்தை வென்ற மீனாட்சி சவுத்ரி ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன் பின் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு மனைவியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் நடித்த இரண்டு படங்களின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று கோட் படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் தெலுங்கில் நான்கு பட வாய்ப்புகளைப் பெற்று நடித்துக் கொண்டு வருகிறார்.

ப்ரீத்தி முகுந்தன் நடித்த ஸ்டார் படத்தின் வசூல்

Next Story

- Advertisement -