சீரியலில் இவங்கள பார்த்தாலே கடுப்பாகிற 5 கேரக்டர்கள்.. தில்லாலங்கடி வேலைக்கு மறு உருவமாக இருக்கும் குணசேகரன்

எந்த ஒரு சீரியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கும், அதிக பாப்புலர் ஆவதற்கும் அந்த சீரியலில் உள்ள வில்லத்தனமான நெகட்டிவ் கேரக்டர் தான் முக்கிய காரணமாக இருக்கும். அந்த மாதிரியான கேரக்டர்களை பார்க்கும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் திட்டிக் கொண்டே பார்த்து வருவார்கள். அப்படிப்பட்ட சீரியல் உள்ள கேரக்டர்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று சொல்லும் அளவிற்கு சில கேரக்டர்கள் இருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

ராதிகா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் நெகட்டிவ் ரோலில் ராதிகா என்ற கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த நாடகத்தில் இவர் வந்தாலே ரொம்பவே கடுப்பாக இருக்கிறது. அத்துடன் மக்களிடம் இருந்து அதிகமான திட்டுகளை வாங்கிக் கொள்வதும் இவராகத்தான் இருக்க முடியும். என்னதான் நெகட்டிவ் ஆக நடித்திருந்தாலும் சில கேரக்டரில் நடிக்கும்போது பார்த்து ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் அதற்கு எதிர் மாறாக தான் இவருடைய நடிப்பு இருக்கிறது.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஐஸ்வர்யா: விஜய் டிவியில் அண்ணன் தம்பியின் ஒற்றுமையை வைத்து கூட்டு குடும்பமாக வருகின்ற சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் ஐஸ்வர்யா கேரக்டரில் விஜே தீபிகா நடித்து வருகிறார். இதுவரை இந்த நாடகத்தில் வில்லத்தனமாக இந்த அளவுக்கு யாரும் நடித்ததில்லை. சமீபத்தில் இவருடைய கேரக்டர் சற்று எதிர்மறையாக ஆன நிலையில் மொத்தமாகவே இவரை வெறுக்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்து வருகிறது.

குணசேகரன்: சன் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கக்கூடிய சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் என்றே சொல்லலாம். இந்த சீரியலில் வந்த பிறகு மத்த சீரியல் எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டது. இதில் முக்கியமாக சொல்லக்கூடிய கேரக்டர் என்றால் குணசேகரன் உடைய கேரக்டர் தான். இந்த நாடகத்தில் இவரின் கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக இருந்தாலும் இதில் இவரை திட்டுபவர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு இவருக்காகவே இந்த நாடகத்தை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இவருடைய அராஜகமான வேலையை பார்க்கும் போது மக்கள் கொந்தளித்து தான் வருகிறார்கள்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

வெண்பா: விஜய் டிவியில் எப்பொழுது தான் இந்த நாடகத்தை முடிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்த நாடகம்தான் பாரதி கண்ணம்மா பார்ட் ஒன். அந்த அளவுக்கு இந்த நாடகத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு மக்களை எரிச்சல் படுத்துற அளவுக்கு இந்த சீரியல் அமைந்தது. அதிலும் இதில் வில்லியாக நடித்த வெண்பா கேரக்டரை பார்த்தாலே மக்கள் கடுப்பாகி வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டு வாங்கும் அளவிற்கு இவருடைய நடிப்பு இருந்தது.

ஜனார்த்தன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திலிருந்து தன்னுடைய மகளை தனியாக பிரித்து தன் பக்கமே வைத்துக் கொள்ளும் என்று கங்கணம் கட்டி அலையும் கேரக்டரில் ஜன்னார்த்தன் நடித்து வருகிறார். இவரால் தான் தற்போது இந்த குடும்பமே பிரிந்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ஆக்கப்போர் தனமான வேலைகளை பார்த்து நினைத்த காரியத்தை சாதித்து விட்டார். இவரை பார்க்கும் பொழுதெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் அனைவரும் திட்டி இப்படி ஒரு அப்பா தேவையா என்று சொல்லும் அளவிற்கு நடித்து வருகிறார்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்