மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முதலிடத்தை பிடித்த தலைவர் ஜிபி முத்து

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம்.

அமுதவாணன் : விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமுதவாணன். இவர் ராமராஜனை போல் அப்படியே செய்யக் கூடியவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரசிகர்களை மகிழ்வித்து வருவதால் மக்களுக்கு அதிகம் பிடித்த நபர்களில் இவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read :எங்க தலைவன எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க.. பிக் பாஸ்க்கு வந்த மிரட்டல்

ஜனனி : இலங்கையிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ஜனனி. இவர் முன்பு செய்தியாளராக பணியாற்றி இருந்தார். ஜனனி பிக்பாஸில் நுழைந்த முதல் நாளே இவருக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கி இருந்தனர். இவருடைய அழகும், தமிழும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் நான்காவது இடத்தை ஜனனி பிடித்துள்ளார்.

ஆயிஷா : ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஆயிஷா. இவருக்கு இத்தொடரில் நடித்த போதே எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் இவருடைய எதார்த்தமான பேச்சு ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளதால் இவர் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.

Also Read :நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

ரக்ஷிதா : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவருக்கு இத்தொடரில் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவரது ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது மக்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ரக்ஷிதா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஜிபி முத்து : டிக் டாக் செயலி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பரட்சியமானவர் தலைவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது. இவருடைய வெளந்தியான குணம் ரசிகர்களைப் பெரும் அளவில் கவர்ந்துள்ளது. இதனால் மக்கள் இவரை முதல் இடத்தில் வைத்துள்ளனர்.

Also Read :ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

- Advertisement -